தமிழகம்

மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: தமக்கு சொந்​த​மான நிலம் மோசடி​யாக விற்​கப்​பட்ட வழக்​கில் நடிகை கவுதமி காஞ்​சிபுரம் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். நடிகை கவுதமி, அவரது அண்​ணன் காந்த் ஆகியோ​ருக்கு சொந்​த​மான நிலம் திரு​வள்​ளூர் மாவட்​டம் கோட்​டையூரில் உள்​ளது.

இந்த நிலத்தை விற்​பனை செய்ய கடந்த 2015-ம் ஆண்டு தன்​னிடம் மேலா​ள​ராக இருந்த அழகப்​பனுக்கு சுங்​கு​வார் ​சத்​திரம் சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் பவர் உரிமை கொடுத்​துள்​ளார்.

மேலாளர், நண்பர்கள் மோசடி: இந்த நிலை​யில் அழகப்​பன் தனது நண்​பர்​களான ரகு​நாதன், சுகு​மாரன், பலராமன் ஆகியோ​ருடன் சேர்ந்து மேற்​படி சொத்​துகளை அபகரித்து கொண்டு அதற்கு உண்​டான பணத்தை கவுதமி மற்​றும் அவர் குடும்​பத்​துக்கு தராமல் மோசடி செய்​துள்​ளார்.

இது தொடர்​பாக நடிகை கவுதமி காஞ்​சிபுரம் மாவட்ட குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். இந்​தப் புகாரின் அடிப்​படை​யில் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார் அழகப்​பனை கைது செய்​தனர்.

இந்த வழக்கு காஞ்​சிபுரம் நடு​வர் மன்​றம் 1-ல் நடை​பெற்று வரு​கிறது. இந்த வழக்​கில் தொடர்​புடைய சுகு​மாரன் அண்​மை​யில் உயி​ரிழந்​து​விட்​டார்.

இவர் பெயரை குற்​றப்​பத்​திரி​கை​யில் இருந்து நீக்​கு​வதற்​கான ஆட்​சேபம் குறித்த விசா​ரணைக்​காக நீதி​மன்​றத்​தில் இருந்து கவுதமிக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டது. இந்​நிலை​யில் இது தொடர்​பாக கவுதமி ஆஜராகி விளக்​கம் அளித்​தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடை​பெற உள்​ளது.

SCROLL FOR NEXT