இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து, சென்னையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | படம்: எல்.சீனிவாசன் | 
தமிழகம்

அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்டித்து: தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்​டித்து தமிழகம் முழு​வதும் இடது​சாரி கட்​சிகள் சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்​கான 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், நாட்​டின் சுய​சார்​பு, ஏற்​றுமதி தொழில்​கள், தொழிலா​ளர்​களின் வேலை​வாய்ப்பை பாது​காக்க வலி​யுறுத்​தி​யும் இடது​சாரி கட்​சிகள் சார்​பில் சென்னை, காஞ்​சிபுரம், கோவை, திருப்​பூர் உட்பட தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்றது.

சென்​னை​யில் நடந்த போராட்​டத்​துக்கு சிபிஐ மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன், சிபிஎம் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், சிபிஎம்​எல் மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்பி ஆகியோர் தலைமை வகித்​தனர்.

ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

இரா.​முத்​தரசன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்​றும் பிரதமர் மோடி இரு​வரும் ஒரு​வருக்​கொரு​வர் மாறி​மாறி தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​தனர். ஆனால் இவர்​களது நட்பு இந்​தி​யா​வுக்கு பலனளிக்​க​வில்​லை. ஒரு சுயச்​சார்​புள்ள நாடு மற்​றொரு நாட்​டோடு உறவு வைத்​துக் கொள்​வது அந்​நாட்​டின் இறை​யான்​மை.

ஆனால் அமெரிக்க அதிபர், தான் சொல்​கிற நாடு​களிடம் மட்​டும்​தான் வர்த்​தகம் செய்ய வேண்​டுமென்று சட்​டாம்​பிள்​ளைத்​தன​மாக கூறுகிறார். அமெரிக்​கா​விடம் இந்​தியா சரணாகதி அடை​யாமல், இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட பிற கட்​சிகளோடு கலந்து பேசி மாற்​றுக் கொள்​கையை உரு​வாக்கி இந்​திய தொழில்​களை, தொழிலா​ளர்​களை பாது​காக்க வேண்​டும்.

பெ.சண்​முகம்: டிரம்ப் என்ற தனி நபரின் விருப்​புவெறுப்​பால் விதிக்​கப்​பட்​டுள்ள வரி​யால் பல நாடு​களில் உள்ள லட்​சக்​கணக்​கான முதலா​ளி​கள், தொழிலா​ளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தியா முழு​வதும் ஏராள​மான வேலை​யிழப்பு ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் திருப்​பூர் ஜவுளி உற்​பத்​தி நெருக்​கடிக்கு உள்​ளாகி உள்​ளது.

ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், வேலூர் மாவட்​டங்​களில் தோல் தொழில் முடங்​கும் நிலை உள்​ளது. ஆண்​டுக்கு ரூ.1000 கோடிக்கு ஏற்​றுமதி செய்​யப்​பட்ட முந்​திரி தொழிலில் உள்ள விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இவற்றை சரிசெய்ய அவசர உணர்​வுடன் ஆக்​கப்​பூர்​வ​மாக மத்​திய அரசு செயல்பட வேண்​டும்.
இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT