ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நடைபெற்ற பேரிடர் ஒத்திகை 
தமிழகம்

அக்னிதீர்த்த கடல் பகுதியில் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் அக்னிதீர்த்த கடலில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது. பேரிடர் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி தவிப்பவர்களை படகு மூலம் மீட்பது. கயிறு கட்டி இழுத்து வருவது போன்ற ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

மேலும் மீட்கப்படுபவர்களுக்கு தேவையான முதலுதவி அளித்தல் தொடர்பான விழிப்புணர்வு செய்முறைகளை செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தீயணைப்பு மீட்புப் படையில் அவசர கால பயன்பாட்டு கருவிகள் காட்சிபடுத்தப்பட்டது. இதில் வட்டாச்சியர் முரளிக்குமார், கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT