சென்னை பல்லாவரம் மேம்பால தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. | படம்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன

செய்திப்பிரிவு

சென்னை: ஜிஎஸ்டி சாலை​யில் தனி​யார் கல்​லூரி பேருந்து விபத்​துக்​குள்​ளான​தால் ஏற்​பட்ட கடும் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிய பயணி​களின் வசதிக்​காக, 10-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள் தாமத​மாக புறப்​பட்டு சென்​றன.

சென்னை விமான நிலை​யம் அருகே பல்​லா​வரம் மேம்​பாலத்​தில் நேற்று காலை தனி​யார் கல்​லூரி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை விமான நிலை​யம் - குரோம்​பேட்டை இடையே ஜிஎஸ்டி சாலை​யில் இரண்​டரை மணி நேரம் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

வாக​னங்​கள் சுமார் 3 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு அணிவகுத்து நின்​றன. இதனால், அலு​வல​கம், கல்​லூரி செல்​பவர்​கள் பாதிக்கப்பட்டனர். விமானங்​களில் பயணம் செய்ய சென்னை விமான நிலை​யத்​துக்கு செல்​லும் பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர். ஏராள​மான விமான பயணி​கள், தாங்​கள் பயணம் செய்ய இருக்​கும் விமான நிறு​வனங்​களை செல்​போனில் தொடர்பு கொண்​டு, போக்​கு​வரத்து நெரிசல்​களில் சிக்கி தவித்து கொண்டு இருப்​ப​தாக தெரி​வித்​தனர்.

பயணி​களின் கோரிக்​கையை விமான நிறு​வனங்​கள் ஏற்​றன. போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்த விமான பயணி​கள், விமானங்​களில் வந்து ஏறு​வதற்கு வசதி​யாக, சென்​னை​யில் இருந்து நேற்று காலை புறப்பட வேண்​டிய விமானங்​களான கவு​காத்​தி, ஹைத​ரா​பாத், தூத்​துக்​குடி, கொல்​கத்​தா, புனே, ராஜ​முந்​திரி, மதுரை, கோலாலம்​பூர், மஸ்​கட், இலங்கை உள்​ளிட்ட இடங்களுக்கு செல்லும்10-க்​கும் மேற்பட்ட விமானங்​கள் அரை மணி நேரம் வரை தாமத​மாக புறப்​பட்டு சென்​றன.

SCROLL FOR NEXT