மதுரையில் இருந்து நேற்று காலை புறப்பட்ட வைகை ரயிலுக்கு பூஜை செய்யப்பட்டது. 
தமிழகம்

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வயது 48 - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் சேவையின் 48-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மதுரை-சென்னை இடையே இயங்கி வரும் பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் அறி முகப்படுத்தப்பட்டது.

இந்த ரயிலுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல் நடைமேடையில் காலை 6 மணிக்கு வைகை ரயில் இன்ஜின் முன்பாக ரயில் பயணிகள், ஆர்வலர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து முன்னாள், தற்போதைய ரயில் ஓட்டுநர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உற்சாகமாக புறப்பட்டது.

SCROLL FOR NEXT