தமிழகம்

புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் புறவழிச் சாலைகளை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை ரத்து செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை​யில் 2021 செப்​டம்​பர் மாதம் சுங்கக்கட்டண உயர்வு தொடர்​பாக கொண்டு வரப்​பட்ட கவன ஈர்ப்​புத் தீர்​மானத்​தின்​மீது பேசியநெடுஞ்​சாலைத் துறை அமைச்சர், ‘2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்​சாலைக்கட்டண விதி​களின்​படி குறைந்​த​பட்​சம் 60 கி.மீ.-க்கு ஒரு சுங்​கச்​சாவடி என்பதன் அடிப்​படை​யில், தமிழகத்​தில் 16 சுங்​கச் ​சாவடிகள்​தான் இருக்க வேண்​டும். இந்த விதியை மீறி பெரும்​பாலான சுங்கச்சாவடிகள் செயல்​படு​கின்​றன.

தற்​போது தேசிய நெடுஞ்​சாலைகளில் உள்ள 48 சுங்​கச்​சாவடிகளில் 32 சுங்​கச்​சாவடிகளை மூட தமிழக அரசு முடி​வெடுத்திருப்பதை மத்​திய அரசிடம் தெரிவிக்​கப்​படும். முதல்​கட்​ட​மாக, 10 கி.மீ. சுற்று எல்​லை​யில் உள்ள நெமிலி, சென்​னச​முத்திரம், வானகரம், பரனூர் மற்​றும் சூரப்​பட்டு சுங்​கச்​சாவடிகளை உடனடி​யாக மூடும் திட்​டம் குறித்து மத்​திய அரசிடம் தெரிவிக்​கப்​பட்டு விட்​டது’ என்று தெரி​வித்​தார். இவ்​வாறு அறிவிக்​கப்​பட்டு 4 ஆண்​டு​கள் முடிவடைய​வுள்ள நிலை​யில், எந்த சுங்கச் சாவடி​யும் மூடப்​பட்​ட​தாகத் தெரிய​வில்​லை.

இந்​நிலை​யில், மாநில அரசின் வரு​வாயைப் பெருக்​கும் வகை​யில், வண்​டலூர் - மீஞ்​சூர் வெளிவட்​டச் சாலை பராமரிப்பு மற்​றும் சுங்​கக்கட்​ட​ணம் வசூலிக்​கும் பணியை மேற்​கொள்ள ஒப்​பந்​தப்​புள்ளி கோரப்​பட்​டுள்​ள​தாக​வும், இதன் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி அரசுக்கு கூடு​தல் வரு​வாய் கிடைக்​கும் என்​றும், தொடர்ந்​து, நாமக்​கல், இடைப்​பாடி, கோவை கிழக்​கு, கோவை மேற்​கு, கள்​ளக்​குறிச்​சி, திரு​வள்​ளூர், திருச்சி - கரூர், அருப்​புக்​கோட்​டை, பெரியகுளம் - ஆண்​டிப்​பட்டி உள்​ளிட்ட பல்​வேறு புறவழிச் சாலைகளை தனி​யாரிடம் ஒப்​படைத்​து, சுங்​கக்கட்​ட​ணம் வசூலிக்க முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இது கண்​டனத்​துக்​குரியது. இதில் முதல்​வர் ஸ்டா​லின் தனி கவனம் செலுத்​தி, புறவழிச் சாலைகள் தனி​யாரிடம் ஒப்​படைக்​கப்​படு​வதை உடனடி​யாக ரத்து செய்​ய​வும், தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள 32 சுங்​கச் சாவடிகளை மூட​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT