தமிழகம்

செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில்  மின் கருவிகள் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: ஜப்​பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறு​வனம் மற்​றும் தமிழக அரசு இடை​யில், செங்​கல்​பட்​டில் ரூ.700 கோடி முதலீட்​டில் 1000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் மின் கருவி​கள் உற்​பத்தி ஆலை அமைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் முன்னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜப்​பான் நாட்​டைச் சேர்ந்த உலகளா​விய நிறு​வன​மான கோகி ஹோல்​டிங் ஜப்​பான், ஜெர்​மனி, சீனா, அமெரிக்கா மற்​றும் இந்​தியா ஆகிய நாடு​களில் உற்​பத்தி ஆலைகளைக் கொண்​டுள்​ளது.

பெங்​களூருவை தலை​மை​யிட​மாகக் கொண்​டுள்ள அதன் துணை நிறு​வன​மான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா பிரைவேட் லிமிடெட், 15-க்​கும் மேற்​பட்ட விற்​பனை அலு​வல​கங்​கள், 500-க்​கும் மேற்​பட்ட விநி​யோகஸ்​தர்​கள் மற்​றும் 100-க்​கும் மேற்​பட்ட சேவை மையங்​களு​டன் விரி​வான வலை​யமைப்பை கொண்​டுள்​ளது.

ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா நிறு​வனம், செங்​கல்​பட்டு மாவட்​டம், மஹிந்​திரா வோர்ல்டு சிட்​டி​யில் அமைந்​துள்ள தொழிற்​பூங்​கா​வில், ரூ.700 கோடி உறு​தி​யளிக்​கப்​பட்ட முதலீடு மற்​றும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நேரடி மற்​றும் மறை​முக வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், மின் கருவி​கள் உற்​பத்தி ஆலை அமைப்​ப​தற்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், தொழில் துறை செயலர் வி.அருண்​ராய், தொழில் வழி​காட்டி நிறுவன மேலாண் இயக்​குநர் தா​ரேஸ் அகமது உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT