தமிழகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய காலத்​தில் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​டங்​களின் செய​லாக்​கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் சென்னை தலை​மைச்​ செயலகத்தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி வாயி​லாக ஆய்வு நடத்​தி​னார்.

கூட்​டத்​தில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மக்​களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரு​வதை தொடர்ந்​து, இதற்​காக நன்கு திட்​ட​மிட்​டுப் பணி​யாற்றி வரும் மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் அனைத்​துத் துறை அலு​வலர்​களை​யும் பாராட்​டி​னார். அதே​போன்​று, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​ட​மும் மிகச் சிறப்​பாக நடை​முறைபடுத்​தப்​பட்டு வரு​வ​தால், அதற்​கான பணி​களில் ஈடு​பட்டு வரும் சுகா​தா​ரத்​துறை சார்ந்த மருத்​து​வர்​கள் மற்​றும் துறை அலு​வலர்​களை​யும் பாராட்​டி​னார்.

தொடர்ந்​து, கூட்​டத்​தில் முதல்​வர் பேசி​ய​தாவது: மாவட்ட ஆட்​சி​யர்​கள் தாங்​கள் பெற்ற மனுக்​கள் மீது விரை​வாகத் தீர்வு காண வேண்​டும். குறிப்​பாக, வரு​வாய்த் துறை மற்​றும் ஊரக வளர்ச்​சித் துறை​களில் நிலு​வை​யில் உள்ள மனுக்​கள் மீது உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

முதி​யோர் ஓய்​வூ​தி​யம், பட்டா மாறு​தல், பட்​டா​வில் பெயர் திருத்​தம் ஆகியவை தொடர்​பான மனுக்​களில் நிலு​வை​யில் உள்ளவற்றை விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளி​களுக்கு உரிய உதவி​களைச் செய்ய வேண்​டும். ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ முகாம்​களின் திட்ட ஏற்​பாடு​களில் ஒருசில இடங்​களில் ரத்​தப் பரிசோதனை முடிவு​கள் வழங்​கு​வ​தில் தாமதம், போக்​கு​வரத்து ஏற்​பாடு​கள் போன்​றவை குறித்து எனது கவனத்​துக்கு வந்​தது. அந்த குறைகளை சரி செய்ய வேண்​டும்.

டோக்​கன் வழங்​கும் பகு​தி​களில் கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த அதிக கவுன்ட்​டர்​கள் ஏற்​படுத்த வேண்​டும். முகாம்​கள் நடப்​பது குறித்து பொது​மக்​கள் அறியும் வகை​யில் விளம்​பரங்​கள் செய்ய வேண்​டும். முகாம்​களில் பொது​மக்​களுக்கு குடிநீர் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் போது​மான அளவுக்கு ஏற்​படுத்த வேண்​டும்.

இவற்​றையெல்​லாம், மாவட்ட ஆட்​சித் தலை​வர்​கள் கவனத்​தில் கொண்​டு, குறை​பாடு​கள் இல்​லாமல் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ முகாம்​களை நடத்த வேண்​டும். முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய காலத்​தில் நடவடிக்கை மேற்​கொண்​டு, மனு​தா​ரர்​களின் கோரிக்​கைகளுக்​குத் தீர்வு கண்​டு, அவர்​களுக்​குத் தேவை​யான உதவி​களை செய்து தர வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார். இக்​கூட்​டத்​தில், அமைச்​சர் துரை​முரு​கன், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பல்​வேறு துறை அமைச்​சர்​கள், தலை​மைச்​செயலர்​ நா.​முரு​கானந்​தம்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT