தமிழகம்

அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு; வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை:உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்​சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்​களு​டன் ஸ்டா​லி்ன்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் திமுக மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்​கை​யுடன் வழக்கு தொடர்ந்த அதி​முக எம்​.பி சி.​வி.சண்​முகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் ரூ.10 லட்​சம் அபராதம் விதித்து அவர் தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்​துள்​ளது.

மேலும் அவர் தொடர்ந்த வழக்​கில் சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வை​யும் ரத்து செய்​துள்​ளது. அதையடுத்து நீதிப​திகள், தமிழக அரசின் திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் பெயரை பயன்​படுத்த எதிர்ப்பு
தெரி​வித்து வழக்கு தொடர்ந்த அதி​முக வழக்​கறிஞர் இனியன் மற்​றும் வழக்​கறிஞர் எம்​.சத்​யகு​மார் ஆகியோ​ருக்கு தலா ரூ.1 லட்​சம் அபராதம் வி​தி்த்​து வழக்​கு​களை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT