கணபதி 
தமிழகம்

திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்​டம் கிளிக்​கூடு, உத்​தமர்​சீலி, பனையபுரம், திரு​வளர்​சோலை உள்​ளிட்ட பகு​தி​களில் நெல், வாழை, கரும்பு பயிர்​களை காட்​டுப்​பன்​றிகள் சேதப்​படுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், கடந்த 11-ம் தேதி கவுத்​தரசநல்​லூர் பகு​தி​யில் கொய்யா தோப்​புக்​குள் நுழைந்த காட்​டுப்​பன்​றி, அங்​கிருந்த விவ​சாயி சகாதேவனை(45) கடித்​துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

அதே​போல, அன்று மாலை உத்​தமர்​சீலியைச் சேர்ந்த மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட விவ​சாய அணி முன்​னாள் தலைவ​ரான கணப​தி(70) என்​பவர் தனது வாழைத்​தோப்​புக்கு சென்​ற​போது, அங்கு வந்த காட்​டுப்​பன்றி அவரை​யும் கடித்துக்குதறியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர்​இழந்​தார். இதுகுறித்து நம்​பர்-1 டோல்​கேட் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர்.

இதுகுறித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் ரங்​கம் பகுதி செய​லா​ளர் பி.தர்மா கூறும்​போது, “காட்​டுப்​பன்​றிகளை கட்​டுப்​படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும் நடவடிக்​கை​ இல்​லை. எனவே, காட்​டுப்​பன்றி தாக்​கிய​தில் உயி​ரிழந்​துள்ள கணபதி உடலை வாங்க மறுத்து நாளை (இன்​று) காலை திருச்சி அரசு மருத்​து​வ​மனை முன்பு போராட்​டம் நடத்த உள்​ளோம்” என்​றார்​.

SCROLL FOR NEXT