தமிழகம்

பொது இடங்களில் புகை, மது அருந்துவதை தடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பொது இடங்​களில் புகைப்​பிடிப்​ப​தை​யும், மது அருந்​து​வதை​யும் தடுக்​கும் வித​மாக கடுமை​யான நடவடிக்​கைகளை தமிழக அரசு மேற்​கொள்ள வேண்​டும் என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பொது இடங்​களில் புகைப்​பிடிப்​ப​தால் ஆண்​டுக்கு சுமார் 13.20 லட்​சம் பேர் உயிரிழப்​ப​தாக​வும், அரு​கில் இருப்​பவர்​கள் சுவாசிப்​ப​தால் ஆண்​டுக்கு சுமார் 2.20 லட்​சம் பேர் உயி​ரிழப்​ப​தாக​வும் தெரிவிக்​கும் செய்​தி​கள் கவலைக்​குரியது.

பொது இடங்​களில் புகை​யிலை பயன்​படுத்​து​வோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகா​தா​ரத்​துறை, காவல்​துறை, உள்​ளாட்சி அமைப்​பு​கள், பள்​ளி, கல்​லுாரி ஆசிரியர்​கள் உட்​பட, 21 பேருக்கு புகை​யிலை பொருட்​கள் கட்​டுப்​பாடு சட்​டத்​தில் அனு​மதி வழங்​கப்பட்​டுள்​ளதை கவனத்​தில் கொண்டு செயல்பட வேண்​டும். பேருந்து நிலை​யங்​கள், தேநீர் கடைகள் என பொது இடங்​களில் சிகரெட், புகை​யிலை பொருட்​கள் பயன்​படுத்​தப்​படு​வதை முற்​றி​லும் தடுக்க வேண்​டும்.

SCROLL FOR NEXT