தமிழகம்

இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்க அரசு துணை நிற்கும்: உதயநிதி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: இளம் தலை​முறை​யின் கனவு​கள் நனவாக திமுக அரசு எப்​போதும் துணை நிற்​கும் என துணை முதல்​வர் உதயநிதி கூறியுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வு: தமிழகத்​தின் விடியலுக்​காக இளைஞர்​களால் உரு​வான இயக்​கம் திமுக. இந்​திய வரலாற்​றிலேயே இளைஞர் அணியை உரு​வாக்​கிய முதல் அரசி​யல் இயக்​க​மும் திமுகதான்.

இளைஞர்​களால் உரு​வாகி, இளைஞர்​களோடு பயணித்​து, எதிர்​கால இளம் சமு​தா​யம் கல்​வி, வேலை​வாய்ப்​பு, பொருளா​தார சமநிலை பெற தொடர்ந்து போராடும் இயக்​கத்​தின் இளைஞர் அணிச் செய​லா​ளர் என்ற முறை​யில் தமிழகத்​தின் நாளைய தலை​வர்​கள் அனை​வருக்​கும் சர்​வ​தேச இளைஞர்​கள் தின வாழ்த்​துக்​கள்.

இளம் தலை​முறை​யின் கனவு​கள் நனவாக முதல்​வர் ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக அரசு என்​றும் துணை நிற்​கும். எதிர்​காலம் நமக்​கானது. உயர்ந்த கனவு​களோடு அயராது உழைப்​போம். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார். இத்​துடன் கடந்து 4 ஆண்டு கால திமுக ஆட்​சி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட திட்​டங்​கள் குறித்த வீடியோ பதிவு ஒன்​றை​யும் வெளி​யிட்​டார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: திறமைமிக்க தமிழக இளைஞர்​களை இன்​றைக்கு உலகமே உற்று கவனிக்​கிறது. தமிழகத்​தின் இளைய சமு​தா​யம் உலகை வெல்ல தயார் நிலை​யில் உள்​ளதற்கு காரணம் கடந்த 4 ஆண்​டு​கால ஆட்​சி​யில் கல்​வியோடு சேர்த்து இளைஞர்​களின் எதிர்​கால வாழ்க்​கைக்கு என்ன தேவையோ, அதை சரி​யாக செய்து கொடுத்​துள்​ளது திமுக. மத்​திய அரசின் அதிகாரப்​பூர்வ தகவல்​படி இந்​தியா முழு​வதும் உள்ள 1.40 லட்​சம் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களில் 8 சதவீத நிறு​வனங்​கள் தமிழகத்தில்​ உள்​ளன.

அதே​போல் நான் முதல்​வன் திட்​டத்​தின் கீழ் 272 வேலை வாய்ப்பு முகாம்​கள் நடத்​தப்​பட்​டு, அதன்​மூலம் 63 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட இளைஞர்​களுக்கு வேலை கிடைத்​துள்​ளது. 41 லட்​சம் மாணவர்​களுக்​கும் 1 லட்​சம் விரிவுரை​யாளர்​களுக்​கும் நான் முதல்​வன் திட்​டம் மூல​மாக திறன் ​ப​யிற்சி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம் தொழில் வளர்ச்​சிக்கு தமிழகம் ஒரு முன்​னோடி​ சாம்பியன்​ மாநில​மாக தி​கழ்​கிறது.

SCROLL FOR NEXT