தமிழகம்

மேட்​டூர் அணைக்கு நீர்வரத்து 9,200 கனஅடி​யாக சரிவு

செய்திப்பிரிவு

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,200 கனஅடி​யாக சரிந்​துள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 13,483 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 9,200 கனஅடி​யாக குறைந்​தது.

அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 14,000 கனஅடி, கால்​வாய் பாசனத்​துக்கு 500 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது.

அணை நீர்​மட்​டம் நேற்று 118.54 அடி​யாக​வும், நீர் இருப்பு 91.16 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 9,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 8,000 கனஅடி​யாக குறைந்​தது.

SCROLL FOR NEXT