பழநி அரு​கே​யுள்ள கொழு​மங்​கொண்​டானில் நேற்று நடை​பெற்ற ரேக்ளா பந்​த​யத்​தில் சீறிப்​பாய்ந்த காளைகள். 
தமிழகம்

பழநி அருகே ரேக்ளா பந்​தயம்: சீறிப் பாய்ந்த காளைகள்

செய்திப்பிரிவு

பழநி: பழநி அருகே நேற்று நடை​பெற்ற ரேக்ளா பந்​த​யத்​தில் காளை​கள் சீறிப் பாய்ந்து பார்​வை​யாளர்​களை ஆச்​சரியப்​படுத்தின. முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்​த​நாளை​யொட்​டி, திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அரு​கே​யுள்ள கொழு​மங்கொண்​டான் கிராமத்​தில் ரேக்ளா மாட்டு வண்டி பந்​த​யம் நேற்று நடை​பெற்​றது.

அமைச்​சர் அர.சக்​கர​பாணி பந்​த​யத்தை கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார். பெரிய காளை​கள், சிறிய காளை​கள் என 2 வகைகளாகப் பிரிக்​கப்​பட்டு போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

பெரிய காளை​களுக்கு 300 மீட்​டர் தூர​மும், சிறிய காளை​களுக்கு 200 மீட்​டர் தூர​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டு, போட்​டிகள் நடை​பெற்​றன. இதில், கோவை, ஈரோடு, திருப்​பூர், திண்​டுக்​கல், திருச்​சி, மதுரை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் இருந்து வந்து ரேக்ளா வண்​டிகள் பங்​கேற்​றன. போட்​டி​யில் சீறிப்​பாய்ந்த காளை​களை சாலை​யின் இரு​புற​மும் நின்று ஏராள​மானோர் ஆர்​வத்​துடன் பார்​வை​யிட்​டனர்.

போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்கு முதல் பரி​சாக ஒன்​றரை பவுன் தங்க நாண​யம், 2-வது பரி​சாக ஒரு பவுன் தங்க நாண​யம், 3-வது பரி​சாக முக்​கால் பவுன் தங்க நாண​யம் மற்​றும் வெற்றி பெற்ற அனை​வருக்​கும் கேட​யங்​கள் வழங்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT