தமிழகம்

தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கும் விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு தேசிய எஸ்சி ஆணையம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: தூய்​மைப் பணியை தனி​யாரிடம் வழக்​கும் விவ​காரம் தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி ஆணை​யரிடம் விளக்​கம் கேட்​டு, தேசிய ஆதி​தி​ரா​விடர் ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், ஏற்​க​னவே 10 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி தனி​யாரிடம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது, ராயபுரம், திரு.​வி.க ஆகிய 2 மண்​டலங்​களில் குப்பை சேகரிக்​கும் பணியை தனி​யார் நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்க மாநக​ராட்சி முடிவு செய்​துள்​ளது. தனி​யார்​மய​மாதலை கைவிடக் கோரி​யும், தற்​காலிக​மாக பணி​யாற்றி வரும் தூய்​மைப் பணியாளர்​களை, பணி நிரந்​தரம் செய்ய வலி​யுறுத்​தி​யும், ராயபுரம், திரு.​வி.க. நகர் மண்​டலங்​களை சேர்ந்த தூய்மை பணியாளர்​கள் 7-வது நாளாக நேற்​றும் வேலை நிறுத்​தம் மற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் நடத்தி வருகின்றனர். இவர்​களில் பலர் ஆதி​தி​ரா​விடர் சமூகத்தை சேர்ந்​தவர்​கள்.

நேற்று முன்​தினம் அமைச்​சர் கே.என்​.நேரு​வுடன் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு எட்​ட​வில்​லை. தொடர் வேலை நிறுத்தத்​தால், இரு மண்​டலங்​களி​லும் குப்​பைகள் சாலைகளில் குவியல்​களாக கிடக்​கின்​றன. அப்​பகு​தி​களில் துர்​நாற்​றம் வீசி வரு​கிறது. இவர்​களுக்கு ஆதர​வாக உழைப்​போர் உரிமை இயக்​கம் செயல்​பட்டு வரு​கிறது.

மேலும், நேற்று பாஜகவை சேர்ந்த கராத்தே தியாக​ராஜன், இந்​திய குடியரசு கட்​சித் தலை​வர் செ.கு.தமிழரசன், பாமக வழக்கறிஞர் பாலு உள்​ளிட்​டோர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை சந்​தித்​து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்​திய குடியரசு தொழிலா​ளர் தொழிற்​சங்க மாநில தலை​வர் அன்​புவேந்​தன், தேசிய ஆதி​தி​ரா​விடர் ஆணையத்தில் புகார் அளித்​துள்​ளார். அதில், “மத்​திய அரசின் என்​யூஎல்​எம் திட்​டத்​தின் கீழ் பணி​யாற்றி வந்த எஸ்சி தூய்மை பணி​யாளர்​களின் வேலை பறிக்​கப்​பட்​டு, வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களின் வேலைக்​கான பாது​காப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என கூறப்​பட்​டுள்​ளது.

இதனைத் தொடர்ந்​து, இந்த ஆணை​யம் சார்​பில், மாநக​ராட்சி ஆணை​யரிடம் விளக்​கம் கேட்​டு, நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அதில், “பு​கார்​தா​ரர் தெரி​வித்​துள்​ளதன் உண்மை நிலை, அதன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து 15 நாட்​களுக்​குள் விளக்​கம் அளிக்க வேண்​டும். அப்​படி அளிக்​கா​விட்​டால், நேரில் ஆஜராக சம்​மன் அனுப்​பப்​படும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT