உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் வந்த தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா அவரது கணவர் விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தமிழகம்

தமிழக அரசு நிறையும் குறையும் கலந்துள்ளது: பிரேமலதா கருத்து

செய்திப்பிரிவு

காஞ்​சிபுரம்: தமிழ்நாட்டில் திமுக ஆட்​சி​யில் நிறை​யும், குறை​யும் கலந்து உள்​ளது என்று தேமு​திக பொதுச் செயலர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​தார். காஞ்​சிபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ நிகழ்ச்​சி​யானது காஞ்​சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகு​தி​யிலுள்ள ஓரு தனி​யார் திருமண மண்​டபத்​தில் நடை​பெற்​றது. இதில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் பங்​கேற்று நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​களுக்கு பல்​வேறு ஆலோ​சனை​களை வழங்​கி​னார்.

பின்​னர் பிரேமலதா விஜய​காந்த் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ்​நாட்​டில் திமுக அரசில் நிறை​யும், குறை​யும் கலந்து உள்ளது. ஆணவக் கொலை, விசா​ரணைக் கொலை, திருட்டு உள்​ளிட்ட பல்​வேறு குற்​றங்​கள் நடக்​கின்​றன.

சட்​டம் ஒழுங்கை கையில் வைத்​திருக்​கும் முதல்​வர் ஸ்டா​லின் இரும்​புக் கரம் கொண்டு இவர்​களை ஒடுக்​க​வும், சட்​டம் ஒழுங்கை சரி செய்​ய​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். திமுக ஆட்​சிக்கு 50, 50 என மதிப்​பெண் அளிக்​கலாம்.

ஆணவக் கொலைகள் நடப்​ப​தற்கு முக்​கிய காரணம் சாதிவெறி​தான். பெரி​யார், பார​தி​யார் போன்​றோர் எவ்​வளவோ கருத்​துகளை எடுத்​துக் கூறி​னாலும் சாதி வெறி இன்​னும் மக்​கள் மத்​தி​யில் உள்​ளது.

இந்த விவ​காரத்​தில் அரசையோ, தனி நபர்​களையோ குறை கூறு​வதை விட ஒட்டு மொத்​த​மாக மக்​களின் மனநிலை மாறி​னால் மட்​டுமே முடி​யும்.முதல்​வர் ஸ்டா​லினை, அவர் உடல் நலம் சரியில்​லாத​தால் சந்​தித்​தோம். இதில் அரசி​யல் முக்​கி​யத்​து​வம் ஏதும் இல்லை என்​றார்.

செய்​தி​யாளர் சந்​திப்​பின்​போது, தேமு​திக பொருளர் எல்​.கே.சுதீஷ், தேமு​திக இளைஞரணி செயலர் விஜயபிர​பாகரன்​ ஆகியோர் உடன் இருந்தனர்.உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் வந்த தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா அவரது கணவர் விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT