தமிழகம்

குடியரசுத் தலைவருக்கு கலைஞர் பல்கலை. மசோதா அனுப்பிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கும்​பகோணத்​தில் கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்​கான சட்ட மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி அனுப்​பி​ வைத்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் பட்​ஜெட் கூட்​டத் தொடர் நடைபெற்​றது.

இக்​கூட்​டத் தொடரில், கும்​பகோணத்​தில் மறைந்த முன்​னாள் முதல்​வர் மு.கருணாநிதி பெயரில் கலைஞர் பல்​கலைக்​கழகத்தை உரு​வாக்​கு​வதற்​கான சட்​டமசோதா தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது.

அதன்​பின் மசோதா ஆளுநர் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் நிலுவையில் இருந்​தது. இந்த சூழலில் மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி அனுப்​பி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

பல்​கலைக்​கழக மானியக் குழு (யுஜிசி) விதி​கள் மற்​றும் துணைவேந்​தர் நியமன மசோதா உள்ளிட்டவை தொடர்​பாக பல்​வேறு வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், மசோதா குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT