தமிழகம்

பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​ கூட கட்டவில்லை என்பதா? - அன்​புமணிக்கு அமைச்​சர் துரை​முரு​கன் பதில்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம் கேட்டு சரி​யான புள்​ளி​விவரத்​துடன் அன்​புமணி பேச வேண்​டும் என கூறி​யுள்​ளார்​. இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பாமகவைச் சேர்ந்த அன்​புமணி, தன் தந்​தை​யான ராமதாஸை எதிர்த்து தமிழகத்​தில் திக் விஜ​யம் செய்ய புறப்​பட்​டிருக்​கிறார்.

வேலூருக்கு வந்து ஒரு பொதுக்​கூட்​டத்​தில் பேசும்​போது, என்​மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்​து​விட்​டு, அதே வேகத்​தில் நான் அமைச்​ச​ராக இருந்து ஆற்​றிய பணி​கள் குறித்து விவரம் தெரி​யாமல் கொச்​சைப்​படுத்தி ஒரு குற்​றச்​சாட்டை என்​மீது சுமத்தியிருக்​கிறார். அதாவது, இந்த மாவட்​டத்​தில் ஒரு அமைச்​சர் இருக்​கிறார். பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்டியதுண்டா என்று முழக்​கமிட்​டிருக்​கிறார்.

அன்​புமணி அவர்​கள் கொஞ்​சம் விவர​மானவர் என்று இது​நாள்​ வரை நினைத்​திருந்​தேன். ஆனால், வேலூரில் என் மீது அவர் சாட்டிய தவறான குற்​றச்​சாட்​டிலிருந்து விவரம் தெரி​யாதவர் என்று நிரூபித்​திருக்​கிறார். மறைந்த கருணாநிதி பொதுப்​பணித்துறை அமைச்​ச​ராக இருந்​த​போது​தான் ஆறுகளின் குறுக்கே தடுப்​பணை​கள் கட்​டும் பணியை தொடங்​கி​னார்.

அதன் தொடர்ச்​சி​யாக கருணாநி​தி, மு.க.ஸ்​டா​லின் முதல்​வ​ராக இருந்த கால​கட்​டத்​தி​ல் நான் இந்த துறைக்கு அமைச்​ச​ராக இருந்தபோது, பாலாற்​றில் இறை​யங்​காடு, பொய்​கை, சேண்​பாக்​கம், அரும்​பருத்​தி, திருப்​பாற்​கடல் ஆகிய இடங்​களி​லும் கவுண்டன்யா நதி​யில் ஜங்​காலப்​பள்​ளி, செதுக்​கரை, பென்​னை​யாற்​றில் பரம​சாத்​து, பொன்​னை, குகையநல்​லூர் ஆகிய இடங்களி​லும் தடுப்​பணை​கள் கட்​டினேன்.

இதுத​விர பாம்​பாற்​றில் மட்​றப்​பள்​ளி, ஜோன்​றாம்​பள்​ளி, கொசஸ்​தலை​யாற்​றில் கரியகூடல், அகரம் ஆற்​றில் கோவிந்​தப்​பாடி, மலட்​டாற்​றில் நரி​யம்​பட்​டு, வெள்​ளக்​கல் கானாற்​றில்- பெரி​யாங்​குப்​பம், கானாற்​றில் சின்​னவேப்​பம்​பட்டு ஆகிய இடங்​களில் தடுப்​பணை​கள் கட்​டி​யுள்​ளேன். இந்த ஆண்டு அம்​பலூர், பாப்​பனபள்​ளி- செங்​குனிகுப்​பம், அம்​முண்​டி, வெப்​பாலை ஆகிய இடங்களில் தடுப்​பணை​கள் கட்​டும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. எனவே, அன்​புமணி இனிமேலா​வது பேசும்​முன், விவரம் தெரிந்​தவர்​களிடம் கேட்டு சரி​யான புள்​ளி​விவரத்​துடன் பேசுவது நல்​லது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT