தமிழகம்

மெட்ரோ ரயிலில் 1.03 கோடி பேர் ஜூலையில் பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ஒரு கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேர் பயணம் செய்துள்ளனர். இது சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றிலேயே அதிக பட்ச எண்ணிக்கையாகும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், ஜூலை மாதத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை சாதனை அளவாக உள்ளது.

ஜூலை மாதத்தில் க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தி 45 லட்சத்து 66 ஆயிரத்து 58 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 6 லட்சத்து 55 ஆயிரத்து 991 பேரும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 51 லட்சத்து 56 ஆயிரத்து 786 பேரும் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT