தமிழகம்

ஆசிரியர்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர்​களுக்கு மனமொத்த மாறு​தல் கலந்தாய்வு ஆக. 1-ல் நடை​பெறுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்​களுக்​கான மனமொத்த மாறு​தல் கலந்​தாய்வு அடுத்த மாதம் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு கடந்த ஜூலை 22-ல் தொடங்கி 27-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

ஆசிரியர்​களின் கோரிக்​கையை ஏற்று விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் ஜூலை 30-ம் தேதி (இன்​று) வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. விருப்​ப​முள்ள ஆசிரியர்​கள் மனமொத்த மாறு​தலுக்கு துரித​மாக விண்​ணப்​பிக்க வேண்​டும்.

அதற்கு துறை அலு​வலர்​கள் ஜூலை 31-ம் தேதிக்​குள் ஒப்​புதல் தரவேண்​டும். அதன்​பின் கலந்​தாய்வு ஆக. 1-ல் நடத்​தப்​பட்டு முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் வாயி​லாக மாறு​தல் ஆணை​கள் வழங்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT