தமிழகம்

சமூக நீதிக்கான அரசியல் மற்றும் போராட்டத்தை நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: சமூக நீதிக்​கான அரசி​யலை​யும், போராட்​டத்​தை​யும் நாம் மீண்​டும் மீண்​டும் சொல்​லிக்​கொண்டே இருக்க வேண்​டும் என்று மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு 27 சதவீதம் இடஒதுக்​கீடு பெற்​றதை சுட்​டிக்​காட்டி முதல்​வர் மு.க.ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். அகில இந்​திய மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி பிரி​வினருக்கு 27 சதவீதம் இடஒதுக்​கீடு தொடர்​பாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி சாதக​மான தீர்ப்பு வெளிவந்​தது.

இந்த வெற்​றியைக் குறிப்​பிட்​டு, மாநிலங்​களவை திமுக எம்​.பி.​யும், மூத்த வழக்​கறிஞரு​மான பி.​வில்​சன் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது:சமூகநீதி வரலாற்​றின் சாதனை மைல் கல். 2021 ஜூலை 29 அன்​று, அகில இந்​திய மருத்​துவ மாணவர் சேர்க்​கை​யில் ஓபிசி 27 சதவீதம் இடஒதுக்​கீடு வென்று காட்​டிய சமூகநீதி நன்​னாள். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காட்​டிய வழி​யில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறு​தி​யில் சட்​டப் போராட்​டத்​தில் வென்று காட்​டினோம்.

மருத்​து​வப் படிப்​பு​களில் இதர பிற்​படுத்​தப்​பட்ட மாணவர்​களுக்கு இழைக்​கப்​பட்ட அநீ​தி​களுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து, அவர்​களின் உரிமை​களை மீட்​டெடுத்​ததன் மூலம், ஆண்​டு​தோறும் இந்​திய அளவில் மருத்​து​வப் படிப்​பு​களில் 4,022 இடங்​களும், பல் மருத்​துவ படிப்​பு​களில் 1,000 இடங்​களும் கிடைக்கப்​பெற்ற நிலை​யில், கடந்த 4 ஆண்​டு​களில் மொத்​த​மாக 20,088 மருத்​துவ இடங்​களை ஓபிசி வகுப்​பினைச் சார்ந்த மாணவர்​கள் பெற்று பயனடைந்​துள்​ளனர்.

முதல்​வரின் இந்​தப் பணி மகத்​தானது மட்​டுமல்​ல, வரலாற்​றில் பொன்​னெழுத்​துக்​களால் பொறிக்​கப்பட வேண்​டியது. சாதனை பயணம் தொடரட்​டும், சமூக நீதி தீர்ப்பு சிறக்​கட்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​திருந்​தார்.

இதைச் சுட்​டிக்​காட்​டி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘20,088 இடங்​கள் என்​பது பல குடும்​பங்​களின் பல தலை​முறைக் கனவு. சதிக்​குக் கால் முளைத்து சாதி​யாகி, உழைக்​கும் மக்​களை ஒடுக்​கி​னாலும், விதி வலியது - இது​தான் நம் தலை​யில் எழு​தி​யது என சுருண்​டு​வி​டா​மல், போராடி பெறும் உரிமை​களால் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​பு​களில் நமக்​கான இடங்​களை உறு​தி​செய்​கிறோம்.

சமூக நீதிக்​கான இந்த அரசி​யலை​யும் - போராட்​டத்​தை​யும் நாம் மீண்​டும் மீண்​டும் சொல்​லிக்​கொண்டே இருக்க வேண்​டும். நம் விரல்​களைக் கொண்டே நம் கண்​களைக் குத்​தும் வித்​தையறிந்​தவர்​கள் செய்​யும் சூழ்ச்சி அரசி​யலை முறியடிக்க, இந்​நாளின் வரலாற்று முக்​கி​யத்​து​வத்தை உரக்​கச்​ சொல்​வோம்’’ என தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT