நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் நிறு​வனம் சார்​பில் கவிஞர் ஜீவ​பாரதி எழு​திய ‘காலம்​தோறும் கம்​யூனிஸ்​டு​கள்’ நூலை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வெளி​யிட, குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்​டார். உடன் இந்​திய கம்​யூனிஸ்ட் தேசிய செயலர் டி.​ராஜா, மார்க்​சிஸ்ட் கட்சி மாநிலச்​ செய​லா​ளர்​ பெ.சண்​முகம்​,நியூ செஞ்​சுரி புத்​தக நிறு​வனத்​தின்​ தலை​வர்​ த.ஸ்​​டா​லின்​ குணசேகரன்​, மேலாண்மை இயக்​குநர் க.சந்​தானம்​. படம்: ம.பிரபு 
தமிழகம்

மாறாத தன்மையோடு போராடும் கம்யூனிஸ்ட் இயக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: கம்​யூனிச இயக்​கம் மாறாத தன்​மையோடு நிலைத்து நின்று மக்​களுக்​காக போராடி வரு​கிறது என்று புத்தக வெளியீட்டு விழா​வில் நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​தார். நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் நிறு​வனம் சார்​பில் கவிஞர் ஜீவ பாரதி எழு​திய ‘காலம்​தோறும் கம்​யூனிஸ்​டு​கள்’ நூலை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வெளி​யிட, குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்டார்.

அப்​போது தங்​கம் தென்​னரசு பேசி​யது: காலங்​கள் மாறிக்​கொண்​டிருக்க முடி​யும். ஆனால், கம்​யூனிஸ்​டு​கள் ஒரு​போதும் மாறுவது இல்​லை. மாற்​றம் ஒன்​று​தான் மாறாதது என்​பது கணிதத்​துக்கு பொருத்​த​மாக இருக்​கலாம்.

ஆனால், பொது​வாழ்​வில் நூற்​றாண்டு கண்​டிருக்​கக்​கூடிய கம்​யூனிஸ்ட் இயக்​கம் மாறாது தன்​மை யோடு நிலைத்து நின்று மக்களுக்​காக போராடி வருகிறது. கம்​யூனிசம் என்​பது மாறிலி மட்​டும் அல்ல, ஒரு முடி​விலி​யாக​வும் இருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

முதல்​வர் வாழ்த்து: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள வாழ்த்து செய்​தி​யில், ‘இந்​நூல், இந்த மண்​ணின் சிந்​தனையைச் சிவப்​பாக்​கிய தென்​னிந்​தி​யா​வின் முதல் கம்​யூனிஸ்ட் சிங்​கார​வேலர் முதல் மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்த்த தா.​பாண்​டியன் வரையி​லான 100 கம்​யூனிஸ்ட் தலை​வர்​களின் வாழ்க்கை குறிப்​பு​களை இன்​றைய தலை​முறைக்கு எடுத்து இயம்​பு​கிறது.

இந்​நூல் பொது​வுடமை இயக்​கத்​துக்கு மட்​டுமின்​றி, பொதுச் சமூகத்​துக்​கும் வழி​காட்​டக் கூடிய மிகப்​பெரிய ஆவண​மாக இருக்​கும். இந்த நூலை உரு​வாக்க வழி​வகுத்த இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன், நூலாசிரியர் கவிஞர் ஜீவ​பார​திக்​கும் எனது பாராட்​டு’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

இந்த நிகழ்ச்​சி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் தேசிய செய​லா​ளர் டி.​ராஜா, மாநில செய​லா​ளர் முத்​தரசன், மார்க்​சிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், நியூ செஞ்​சுரி புத்தக நிறுவன தலை​வர் த.ஸ்​டா​லின் குணசேகரன், மேலாண்மை இயக்​குநர் க.சந்​தானம் மற்​றும் கட்​சி​யினர் கலந்து கொண்​டனர்.

SCROLL FOR NEXT