தமிழகம்

செவிலியர்களுக்கு திமுக அரசு பக்கபலமாக நிற்கும்: துணை முதல்வர் உதயநிதி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு நர்​சிங் கவுன்​சில் நூற்​றாண்டு தொடக்க விழா​வில் பங்​கேற்று 25 செவிலியர்​களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்​கிய துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், திமுக அரசு என்​றைக்​கும் செவிலியர்​களுக்கு பக்க பலமாக நிற்​கும் என்று தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு செவிலியர் மற்​றும் மகப்​பேறு செவிலியர் அவை​யத்​தின் நூற்​றாண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்​தது. இதில் 25 செவிலியர்​களுக்கு 2025-ம் ஆண்​டுக்​கான சிறந்த செவிலியர் மற்​றும் வாழ்​நாள் சாதனை​யாளர் விருதுகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். தொடர்ந்து நூற்​றாண்டு தொடக்க விழா இலச்​சினை மற்​றும் காலண்​டர் தொகுப்​பினை வெளி​யிட்​டார்.

இதில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், செயலர் ப.செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்​வுக் குழும திட்ட இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் மற்​றும் தமிழ்​நாடு செவிலியர் மற்​றும் மகப்​பேறு செவிலியர் அவை​யத்​தின் தலை​வர் ஜெ.​ராஜமூர்த்​தி, பதி​வாளர் எஸ்​.அனி கிரேஸ் கலைம​தி, துணை தலை​வர் அனி ராஜா, மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், சென்னை மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, எம்​எல்​ஏக்​கள் தாயகம் கவி, நா.எழிலன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

விழா​வில் உதயநிதி பேசி​ய​தாவது: உலகில் பிறக்​கக்​கூடிய ஒவ்​வொரு குழந்​தை​யும் தன்​னுடைய சொந்த தாயின் முகத்தை பார்ப்​ப​தற்கு முன்​பாக செவிலியர்​கள் முகத்​தை​தான் பார்க்​கின்​றனர். இந்த செவிலியர் கவுன்​சில்​தான் இந்​தி​யா​வில் மட்​டுமல்ல தென்​கிழக்கு ஆசி​யா​விலேயே செவிலியர்​களுக்​காக உரு​வாக்​கப்​பட்ட முதல் கவுன்​சில் என்ற பெரு​மைக்​குரியது.

உலகிலேயே மூன்​றாவ​தாக நூற்​றாண்டு காணுகின்ற செவிலியர் கவுன்​சில் என்ற பெருமை நம்​முடைய கவுன்​சிலுக்​குத்​தான் உண்​டு. எனவே, இந்த கவுன்​சில் என்​பது தமிழகத்​துக்கு மட்​டுமல்ல, இந்​தி​யா​வுக்கே மிகப்​பெரிய பெரு​மை​யாக திகழ்​கிறது.

பிரசவத்​தின்​போது தாய், சேய் இறப்பு விகிதத்தை பெரு​மளவு குறைத்​து, இன்​றைக்கு இந்​தி​யா​விலேயே சிறந்த மாநில​மாக தமிழகம் விளங்​கு​கிறது. இந்த வெற்​றிக்கு காரணம் மனித உயிர்​களை​ சமமாக கருதும் மருத்​து​வர்​களும், செவிலியர்​களும்​தான். இந்த கவுன்​சிலில் மொத்​தம் 2.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட செவிலியர்​கள் பதிவு செய்​துள்​ளனர்.

இவ்​வளவு எண்​ணிக்கை தமிழகத்​தில் வளர்ந்​திருப்​ப​தற்கு திமுக ஆட்​சிக் காலத்​தில் கொண்டு வரப்​பட்ட திட்​டங்​களும், உரு​வாக்​கப்​பட்ட சுகா​தார கட்​டமைப்​பு​களும்​தான் காரணம். திமுக அரசு என்​றைக்​கும் செவிலியர்​களுக்கு பக்க பலமாக நிற்​கும். இன்​றைக்கு நூற்​றாண்டு காண்​கின்ற இந்த செவிலியர் கவுன்​சில் மேலும் பல ஆண்​டு​கள் செயல்​பட்​டு, மக்​கள் பணி​யாற்​றிட வேண்​டும், தமிழகத்​தின்​ சுகா​தா​ரத்​தை பேணி பாது​காத்​திட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT