தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற விழாவில் விரிவாக்கப்பட்ட விமான நிலையம் உட்பட ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு. படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடியை அளித்துள்ளது: பிரதமர் மோடி தகவல்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தமிழகத்​துக்கு கடந்த 10 ஆண்​டு​களில் மத்​திய அரசு ரூ.3 லட்​சம் கோடியை அளித்​துள்​ள​தாக​வும், இது கடந்த காங்​கிரஸ் ஆட்​சி​யில் அளிக்​கப்​பட்ட தொகை​யை​விட 3 மடங்கு அதி​க​மாகும் என்​றும் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​னார்.

விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து​வைத்​தும், தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் வடக்கு முனை​யம்-3 உட்​பட, தமிழகத்​தில் மத்​திய அரசு செயல்​படுத்​தி​யுள்ள ரூ.4,900 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தும் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

மேக் இன் இந்​தியா திட்​டத்​தால் இந்​தியா பெரிய வளர்ச்​சியை அடைந்து வரு​கிறது. தமிழகத்தின் ஆற்​றல் வளத்தை மேம்​படுத்த, தூத்​துக்​குடி துறை​முக கட்​டமைப்பை உயர்​தொழில்​நுட்​பத்​துடன் வளர்த்​துக் கொண்​டிருக்​கிறோம். இங்கு ரூ.450 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள விமான​முனை​யம், ஆண்​டு​தோறும் 20 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பயணி​களைக் கையாளும்.

3 மடங்கு அதிகம்... தமிழகத்​தில் ரூ.2,500 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள சாலை திட்​டங்​களால் வர்த்​தகம், வேலை​வாய்ப்​புக்​கான பாதைகள் திறக்​கும். கடந்த 11 ஆண்​டு​களில் ரயில்வே நவீனமய​மாக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தி​லும் ரயில்வே வளர்ச்சி திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 77 ரயில் நிலை​யங்​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தின் வளர்ச்​சி, மேம்​பட்ட தமிழகம் என்ற கனவு நமது முக்​கிய​மான உறு​திப்​பா​டாகும். தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு நாம் முக்​கி​யத்​து​வம் அளித்து வந்​துள்​ளோம். கடந்த 10 ஆண்​டு​களில் மத்​திய அரசு தமிழகத்​துக்கு ரூ.3 லட்​சம் கோடியை அளித்​திருக்​கிறது. இந்த தொகை கடந்த காங்​கிரஸ் அரசு அளித்த தொகைையை​விட 3 மடங்கு அதி​க​மாகும்.

கடந்த 11 ஆண்​டு​களில் 11 புதிய மருத்​து​வக் கல்​லூரி​கள் தமிழகத்​தில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. முதன்​முறை​யாக கரையோர மீன்​பிடித் துறை​முகங்​களுக்கு இத்​தனை கரிசனத்​தை​யும், அக்​கறையை​யும் இதற்கு முன்பு யாரும் வெளிப்​படுத்​த​வில்​லை. தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு நாங்​கள் முன்​னுரிமை கொடுக்​கிறோம். அதனுடன் தொடர்​புடைய கொள்​கைகளுக்​கும் முன்​னுரிமை அளித்து வரு​கிறோம். இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

விழா​வில், தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய அமைச்​சர்​கள் கிஞ்​ச​ராபு ராம்​மோகன் நாயுடு, எல்​.​முரு​கன், தமிழக அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, டி.ஆர்​.பி.​ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்​துக்​குடி எம்​.பி. கனி​மொழி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்​ எம்​எல்​ஏ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT