தமிழகம்

கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விதிகளைப் பின்பற்றியே கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் அறநிலைய துறை பதில் 

செய்திப்பிரிவு

சென்னை: கோ​யில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படி சட்​ட​வி​தி​களைப் பின்​பற்​றியே கோயில் நிலத்​தில், கோயில் நிதி​யைப் பயன்​படுத்தி கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக அறநிலை​யத்​துறை சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மான நிலங்​களில் கோயில் நிதி​யில் இருந்து பல்வேறு கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு தெரி​வித்து மயி​லாப்​பூரைச் சேர்ந்த ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான டி.ஆர்​. ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கட்​டு​மானப் பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளக்​கூ​டாது எனக் கூறி தற்​போதைய நிலையே நீடிக்க உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் அறநிலை​யத்​துறை தரப்​பில் அரசு வழக்கறிஞர் என்​.ஆர்​.ஆர்​.அருண் நடராஜன் தாக்​கல் செய்த​ பதில் மனு: அறநிலை​யத்​துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களுக்​குச் சொந்​த​மாக பல லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் உள்​ளன. இதில் 23 ஆயிரம் கடைகளும், 76,500 கோயில் சார்ந்த கட்​டு​மானங்​களும் உள்​ளன. இவற்​றின் மூலம் கடந்த 2024 ஏப்​ரல் முதல் 2025 மார்ச் வரையி​லான ஓராண்டு காலத்​தில் குத்​தகை வரு​மான​மாக ரூ.345 கோடி கிடைத்​துள்​ளது.

ஆனால் போது​மான பாசன வசதி கிடைக்​காமலும், நகர்​மய​மாதல் காரண​மாக​வும் பெரும்​பாலான கோயில் நிலங்​களில் இருந்து எந்த வரு​மான​மும் கிடைக்​க​வில்​லை. அந்த நிலங்​களைத் தேர்வு செய்து அங்கு திருமண மண்​டபங்​கள், உணவுக்​கூடங்​கள், அரங்​கங்​கள், கடைகள் கட்​டு​வதன் மூலம் கோயிலுக்கு வரு​வாய் கிடைக்​கும் என்​ப​தா​லும், ஆக்​கிரமிப்​பு​களில் இருந்து அவற்றை பாது​காக்க முடி​யும் என்​ப​தா​லும், கட்​டு​மானங்​கள் மேற்​கொள்ள டெண்​டர் விடப்​பட்டு கட்​டு​மானங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன.

இந்த கட்​டு​மானங்​கள் கோயில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின் அடிப்​படை​யில், உரிய அனு​ம​தி​களைப் பெற்​று, அறநிலை​யத்​துறை சட்​ட​வி​தி​களுக்கு உட்​பட்டே மேற்​கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு கூறப்​பட்டு இருந்​தது. இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எம்​.எம். ஸ்ரீவஸ்​தவா, நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, சட்​ட​வி​தியை மீறி கோயில் நிதி பயன்​படுத்​தப்​பட்​டது குறித்து விளக்க மனு தாக்​கல் செய்​ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்​.

SCROLL FOR NEXT