பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் அடங்கிய மனு குறித்து அதிகாரிகளுடன் அலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின். உடன் கனிமொழி எம்.பி. 
தமிழகம்

தமிழகத்​தின் வளர்ச்​சி திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமரிடம் தங்கம் தென்னரசு வழங்குவார்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்க உள்​ளார்.

கடந்த ஜூலை 21-ம் தேதி முதல்​வர் ஸ்​டா​லினுக்கு நடைப​யிற்​சி​யின் போது தலைசுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர் சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவரை 3 நாட்​கள் ஓய்​வெடுக்க மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். இதையடுத்​து, தொடர் சிகிச்​சை​யில் மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் இருந்து வரு​கிறார். இருப்​பினும், அரசு மற்​றும் கட்சி தொடர்பான ஆலோ​சனை​களை தொடர்ந்து மருத்​து​வ​மனை​யில் இருந்தே மேற்கொண்டு வரு​கிறார். முதல்வரை, குடும்​பத்​தினர், அமைச்​சர்​கள், தலை​மைச்​செயலர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தொடர்ந்து சந்​தித்து பேசி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க தமிழகம் வந்​துள்​ளார். முதல்​வர் அவரை சந்​திக்க இயலாத நிலை​யில், தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்​யப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில், நேற்று தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் முதல்​வரை சந்​தித்து பேசி​னார்.

தொடர்ந்​து, தயாரிக்​கப்​பட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை முதல்​வரிடம் அதி​காரி​கள் அளித்து அவரின் ஒப்​புதலை பெற்​றனர். இந்த சந்​திப்​பின் போது, கனி​மொழிஎம்​.பி.​யும் உடன் இருந்​தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு அளிக்க உள்​ளார். இதுகுறித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘‘மருத்​து​வ​மனை​யில் இருப்​ப​தால் தமிழகத்​துக்கு வரும் பிரதமர் மோடி​யிடம் வழங்க உள்ள கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை தலை​மைச்​செயலர் மூலம் கொடுத்​தனுப்​பி​யுள்​ளேன். நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு பிரதமரிடம் வழங்​கு​வார்’’ என தெரி​வித்​துள்​ளார்​.

திமுகவினருடன் ஆலோ​சனை: இதனிடையே நேற்று சட்​டப்​பேரவை தேர்​தல் தொடர்​பாக, மண்டல பொறுப்​பாளர்​கள், திமுக நிர்​வாகி​களை நேரில் சந்​தித்து ஓரணி​யில் தமிழ்​நாடு மற்​றும்தேர்​தல் களப்​பணி​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். இந்த சந்​திப்​பின்​போது, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், ஆ.ராசா எம்​.பி.,ஆர்​.எஸ்​.​பாரதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். அப்​போது முதல்​வர் ஸ்டா​லின், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்​பில் அதி​க​மான மக்​களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வரு​வதாகவும் அதற்கு காரண​மான நிர்​வாகி​களுக்கு பாராட்டும் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT