தாராசுரத்தில் நேற்று முன்தினம் வீடுகளில் தவெகவினர் ஒட்டிய ஸ்டிக்கரில் விஜய் படத்துடன், ஆனந்த் படமும் இடம் பெற்றிருந்தது. (அடுத்த படம்) ஆனந்த் படம் இல்லாத ஸ்டிக்கர். 
தமிழகம்

தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு விஜய் படம் மட்டும் இடம்பெற உத்தரவு

செய்திப்பிரிவு

கும்​பகோணம்: தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக கட்​சி​யினர் தெரி​வித்​தனர். கும்​பகோணம் வட்​டம் தாராசுரத்​தில் தமிழக வெற்​றிக் கழகத்​தினர் வீடு​தோறும் ‘மக்​கள் விரும்​பும் உங்​கள் வேட்​பாளர் விஜய்’ என அச்​சிட்ட ஸ்டிக்​கர்​களை 300-க் ​கும் மேற்​பட்ட வீடு​களில் நேற்று முன்​தினம் ஒட்​டினர்.

இந்த ஸ்டிக்​கரில் விஜய் படத்​துடன், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் படமும் இடம் பெற்று இருந்​தது. இந்​நிலை​யில், ஸ்டிக்​கரில் ஆனந்த் படத்தை நீக்கி விட்​டு, விஜய் படம் மட்​டும் உள்ள புதிய ஸ்டிக்​கரை அக்​கட்​சி​யினர் அச்​சிட்​டு, வீடு​களில் ஏற்​கெனவே ஸ்டிக்​கர் ஒட்​டப்​பட்​டிருந்த ஸ்டிக்​கருக்கு மேல் ஒட்டி வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக தவெக தஞ்​சாவூர் கிழக்கு மாவட்ட இணைச் செய​லா​ளர் பிர​பாகர் கூறிய​தாவது: கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்​கரில் ஆனந்த் படத்தை அகற்​றி​விட்​டு, விஜய் படத்தை மட்​டும் ஸ்டிக்​கரில் அச்​சிட்​டு, புதிய ஸ்டிக்​கரை ஒட்ட வேண்​டும் என கட்​சித் தலை​மை, உத்தர​விட்​டது. அதன்​படி, புதி​தாக விஜய் படத்தை மட்​டும் ஸ்டிக்​கரில் அச்​சிட்​டு, ஏற்​கெனவே ஒட்​டிய வீடுகளுக்குச் சென்​று, புதிய ஸ்டிக்​கரை ஒட்டி வரு​கிறோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT