தமிழகம்

தூத்துக்குடி உப்பள தொழிலாளி காவல் உயிரிழப்பு வழக்கு: டிஎஸ்பி, 3 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரை: ​வி​சா​ரணை​யின்​போது தூத்​துக்​குடி உப்​பளத் தொழிலாளி உயி​ரிழந்த வழக்​கில் டிஎஸ்பி மற்​றும் 3 காவலர்​களுக்கு விதிக்கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்​தி வைக்​க​வும், ஜாமீன் வழங்​க​வும் உயர் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் மேல அலங்​காரத்​தட்டு பகு​தி​யைச் சேர்ந்தவர் வின்​சென்ட். உப்​பளத் தொழிலா​ளி​யான இவரை நாட்டு வெடிகுண்டு வழக்கு விசா​ரணைக்​காக 1999 செப். 17-ம் தேதி தாள​முத்​து நகர் காவல் நிலை​யத்​துக்கு போலீ​ஸார் அழைத்​துச் சென்றனர். காவல் நிலை​யத்​தில் போலீ​ஸார் வின்​சென்ட்டை தாக்​கி​யுள்​ளனர். இதில் வின்​சென்ட் உயி​ரிழந்​தார்.

வின்​சென்ட்டை போலீ​ஸார் அடித்​துக் கொலை செய்​த​தாக அவரது மனைவி கிருஷ்ணம்​மாள், தாள​முத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்​தார். இது தொடர்​பாக தூத்​துக்​குடி கோட்​டாட்​சி​யர் விசா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பித்​தார்.

பின்​னர் வின்​செட் மரணம் தொடர்​பாக தாள​முத்​துநகர் காவல் ஆய்​வாளர் சோமசுந்​தரம், காவலர்​கள் ஜெயசேகரன், ஜோசப்​ராஜ், பிச்​சை​யா, செல்​லத்துரை, வீர​பாகு, சிவசுப்​பிரமணி​யன், சுப்​பை​யா, ரத்​தின​சாமி, பாலசுப்​பிரமணி​யன், காவல் உதவி ஆய்​வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது கொலை வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கு விசா​ரணை 25 ஆண்​டு​களாக நடை​பெற்று வந்த நிலை​யில், கடந்த ஏப். 5-ம் தேதி தூத்​துக்​குடி மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதிபதி தாண்​ட​வன் தீர்ப்​பளித்​தார். வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட ராமகிருஷ்ணன் (ஸ்ரீவை​குண்​டம் டிஎஸ்​பி), சோமசுந்​தரம் (நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்​வாளர்), பிச்​சையா (நில அபகரிப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்​வாளர்), ஜெயசேகரன், வீர​பாகு, ஜோசப்​ராஜ், செல்​லத்​துரை, சுப்​பை​யா, பாலசுப்​பிரமணி​யன் ஆகியோ​ருக்கு ஆயுள் தண்​டனை​யும், தலா ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதிக்​கப்​பட்​டது. ஓய்வு பெற்ற காவலர்​கள் சிவசுப்​பிரமணி​யன், ரத்​தின​சாமி ஆகியோர் விடு​தலை செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், ஆயுள் தண்​டனையை ரத்து செய்​யக்​கோரி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்​றும் காவலர்​கள் சுப்​பை​யா, ஜெயசேகரன், வீர​பாகு ஆகியோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்​தனர். இந்த மேல்​முறை​யீட்டு மனு விசா​ரணை முடி​யும் வரை ஆயுள் தண்​டனையை நிறுத்​தி​வைத்​து, ஜாமீன் வழங்​கக்​கோரி துணை மனு​வும் தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ்சந்​தி​ரா, ஆர்​.பூர்​ணிமா ஆகியோர் விசா​ரித்​தனர்.

மனு​தா​ரர்​கள் சார்​பில், “வின்​சென்ட் விசா​ரணை​யின்​போது மனு​தா​ரர்​கள் காவல் நிலை​யத்​தில் இல்​லை. மனு​தா​ரர்​கள் தவறாக வழக்​கில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். சம்​பவம் நடை​பெற்று 25 ஆண்​டு​களுக்​குப் பிறகு தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. தண்​டனையை நிறுத்​தி​வைத்​து, ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

அரசுத் தரப்​பில், “வின்​சென்ட் உயி​ரிழப்பு காவல் மரணம் என உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. விசா​ரணை நீதி​மன்​றம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​திய பின்​னரே தண்​டனை வழங்​கி​யுள்​ளது. சம்​பவத்​தின்​போது மனு​தா​ரர்​கள் காவல் நிலை​யத்​தில் இருந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, விசா​ரணை நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பில் தலை​யிட வேண்​டிய​தில்​லை” எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “வின்​சென்ட் உடலில் 38 இடங்​களில் காயங்​கள் இருந்​த​தாக பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. வின்​சென்ட்​டுடன் விசா​ரணைக்கு அழைத்த இரு​வரை போலீ​ஸார் சிறை​யில் அடைத்​துள்​ளனர்.

வின்​சென்ட்டை மட்​டும் காவல் நிலை​யத்​தில் இருந்து அனுப்​பி​யுள்​ளனர். வின்​சென்ட் காவல் நிலை​யத்​திலிருந்து வெளி​யேறிய நேரத்​துக்​கும், மருத்​து​வ​மனை​யில் அவர் இறந்​த​தாக அறிவிக்​கப்​பட்ட நேரத்​துக்​கும் இடையி​லான நேரம் மிக​வும் முக்​கிய​மானது.

வழக்கு விசா​ரணை 25 ஆண்​டு​களாக நடை​பெற்​றதற்கு அரசு தரப்பை காரண​மாக கூற முடி​யாது. விசா​ரணை தாமதத்​துக்கு மனு தா​ரர்​கள்​தான் காரணம். விசா​ரணை நீதி​மன்​றம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​தியே மனு​தா​ரர்​களுக்கு தண்​டனை வழங்கியுள்ளது. எனவே, மனு​தா​ரர்​களின் தண்​டனையை நிறுத்​தி​வைத்​து, அவர்​களுக்கு ஜாமீன் வழங்க எந்த காரண​மும் இல்லை. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று உத்​தரவிட்​டனர்.

SCROLL FOR NEXT