தமிழகம்

இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள்: அரசு பள்ளி குழந்தைகளின் உயிர் இளக்காரமா? - அண்ணாமலை

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகம் முழு​வது​மே, அரசுப் பள்​ளிக் கட்​டிடங்​களின் மேற்​கூரை இடிந்து விழும் சம்​பவங்​கள் தொடர்ந்து வரு​கின்​றன. அரசுப் பள்ளி குழந்​தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்​தனை இளக்​கார​மாகப் போய்​விட்​ட​தா?’ என தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்​சம் மதிப்​பீட்​டில் கட்டப்​பட்​டு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் திறந்​து​வைக்​கப்​பட்ட, ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளிக் கட்​டிடத்​தின் மேற்​கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்​திருக்​கிறது.

விடு​முறை தினமானதால், வகுப்​பறை​யில் மாணவர்​களோ, ஆசிரியர்​களோ இல்​லாமல், அதிர்​ஷ்ட​வச​மாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழு​வது​மே, அரசுப் பள்​ளிக் கட்​டிடங்​களின் மேற்​கூரை இடிந்து விழு​வது, தினசரி செய்தி ஆகி​யிருக்​கிறது. பள்​ளிக் குழந்தைகளுக்​கான கட்​டிடங்​கள் கட்​டு​வ​தில் கூட, திமுக அரசு இத்​தனை அலட்​சி​ய​மாகச் செயல்​படு​வதை சற்​றும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

ஏழை, எளிய குடும்​பப் பின்​னணி​யில் இருந்​து, அரசுப் பள்​ளி​களில் பயில வரும் குழந்​தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்​தனை இளக் கார​மாகப் போய்​விட்​ட​தா? ​விளம்பர ஷூட்​டிங்​கில் பிஸி​யாக இருக்​கும் பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர், இது​வரை இடிந்து விழுந்த பள்​ளிக் கட்​டிடங்​கள் கட்​டிய ஒப்​பந்​த​தா​ரர்​கள் யார், அவர்​கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்​பதை பொது​மக்களுக்கு வெளிப்​படை​யாகத் தெரிவிக்க வேண்​டும்.

மேலும், கடந்த 4 ஆண்​டு​களில் திமுக அரசு கட்​டிய கட்​டிடங்​கள் அனைத்​தை​யுமே, தர உறு​திப் பரிசோதனைக்கு உள்​ளாக்​கு​வது, அனைத்து தரப்பு மக்​களுக்​குமே நல்​லது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT