தமிழகம்

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்ப படிவத்தை பின்வரும் இணையதள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tamilvalarchithurai.tn.gov.in/awards http://awards.tn.gov.in www.tamilvalarchithurai.tn.gov.in இத்தகவலை தமிழ் வளர்ச்சித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT