டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர் சார்பில் கல்வியாளர் மு.ஆனந்தகிருஷ்ணன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி வழங்கினார். உடன் கல்வியாளர் டி.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு 
தமிழகம்

பல்கலைக்கழக வேந்தராக மாநில கல்வி அமைச்சர் இருக்க வேண்டும்: அசோக் வர்தன் ஷெட்டி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​உயர்​கல்வி தொடர்​பாக ஆலோ​சனை வழங்​கும் ‘டெக்​னோகி​ராட்ஸ் இந்​தியா காலேஜ் ஃபைண்​டர்’ அமைப்​பின் சார்பில், மறைந்த கல்​வி​யாளர் மு.அனந்​த கிருஷ்ணன் 97-வது பிறந்​த​நாள் நினைவு சொற்​பொழிவு மற்​றும் கல்வி உதவித்தொகை விருது வழங்​கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்​கலை.

வளாகத்​தில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. முன்​னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்​தன் ஷெட்டி சிறப்பு விருந்​தின​ராக பங்கேற்​று, 3 பழங்​குடி​யின மாணவர்​கள் உட்பட 4 பேருக்கு கல்வி உதவித் தொகைக்​கான காசோலைகளை வழங்​கி​னார்.

தொடர்ந்​து, ‘உயர்​கல்​வி​யில் மறுசீரமைப்பு தேவை’ என்ற தலைப்​பில் அவர் பேசி​ய​தாவது: ஒரு நாட்​டின் வளர்ச்சி என்​பது மக்களின் தனி நபர் கல்​வி, பொருளா​தார வளர்ச்​சியை பொருத்​தது. உயர்​கல்​வி​தான் மக்​களின் வளர்ச்​சிக்கு வழி​வகை செய்கிறது. ஆனால், நாட்​டில் உயர்​கல்வி மிக​வும் மோச​மான நிலை​மைக்கு சென்​று​விட்​டது. அதை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை​யில் இருக்​கிறோம்.

சுதந்​திரம் பெற்​ற​போது, நாட்​டில் 20 பல்​கலைக்​கழகங்​கள், 496 கல்​லூரி​கள்​தான் இருந்​தன. தற்​போது 1,362 பல்​கலைக்​கழகங்​கள், 52,538 கல்​லூரி​கள் உள்​ளன. ஆனால், உயர்​கல்வி பயில்​வோர் விகிதம் 29 சதவீதம் மட்​டுமே. இதை 2035-ம் ஆண்​டுக்​குள் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதை அடைய உயர்​கல்​வி​யில் மறுசீரமைப்பு அவசி​யம். தற்​போதைய கால​கட்​டத்​தில் அனைத்து கல்வி நிறு​வனங்​களி​லும் கட்​ட​ணம் அதி​க​மாக உள்​ளது.

உயர்​கல்​வி​யில் யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்​பு​களின் தலை​யீடு பெரிய பிரச்​சினை​யாக உள்​ளது. இவை அதிக அதி​காரம் செலுத்​துகின்​றன. ஆனால் குறை​வான நிதியை ஒதுக்​கு​கின்​றன. அதே​போல, துணைவேந்​தர் தேடு​தல் குழு​வில் யுஜிசி உறுப்​பினரை நியமிப்​பது தேவையற்​றது. தவிர, கடந்த சில நாட்​களாகவே ஒற்​றுமை என்ற பெயரில் மையப்​படுத்​துதலை நோக்கி நகர்த்​தப்​படு​கிறோம். இது தவறு. கல்​வி​யும், மருத்​து​வ​மும் மாநில அரசின் கட்​டுப்​பாட்​டில்​தான் இருக்க வேண்​டும்.

இதற்கு அடுத்த பிரச்​சினை, பல்​கலைக்​கழக வேந்​த​ராக ஆளுநர்​கள் இருப்​பது. ஆங்​கிலேயர் காலத்​தில் அப்​போது இருந்த 4 பல்​கலைக்​கழகங்​களுக்கு ஆளுநர்​களை வேந்​தர்​களாக நியமித்​தனர். சுதந்​திரத்​துக்கு பிறகு 20 ஆண்​டு​கள் வரை மத்​திய, மாநில அரசுகள் காங்​கிரஸ் அரசாக இருந்​த​தால் எந்த சிக்​கலும் ஏற்​பட​வில்​லை.

அதன்​பிறகு ஏற்​பட்ட அரசி​யல் மாற்​றத்​தால், சிக்கல்களும், அதி​கார மோதல்​களும் ஏற்​பட்​டன. பல்​கலைக்​கழக வேந்​த​ராக மாநில கல்வி அமைச்​சர்​கள்​தான் இருக்க வேண்டும் அல்​லது அரசி​யல் பின்​புலம் இல்​லாத ஒரு​வரை மாநில அரசு தேர்ந்​தெடுக்​க வேண்​டும்​ என்று கூறி​னார்​.

SCROLL FOR NEXT