கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவன வளாகத்தில் நேற்று பருத்தி சாகுபடி தொடர்பாக அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான், மத்திய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங். | படம்: ஜெ.மனோகரன் | 
தமிழகம்

கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி

செய்திப்பிரிவு

கோவை: பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர்​கள் கூறி​னார். மத்​திய பருத்தி ஆராய்ச்சி நிலை​யம் சார்​பில், பருத்தி உற்​பத்​தியை மேம்​படுத்​து​வது குறித்த கலந்​தாய்​வுக் கூட்​டம் கோவை​யில் உள்ள கரும்பு இனப்​பெருக்க நிறுவன வளாகத்​தில் நேற்று நடந்​தது.

மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ்சிங் சவுஹான், மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக கலந்​து​ கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர்​கள் கூறிய​தாவது: மக்​களின் அடிப்​படைத் தேவை​களில் ஒன்​றான ஆடை தயாரிப்​பில் பருத்தி முக்​கியப் பங்கு வகிக்​கிறது. ஒரு காலத்​தில் இந்​தி​யா​வில் அதிக அளவு பருத்தி உற்​பத்தி செய்​யப்​பட்​டது. தற்​போது உற்​பத்தி மற்​றும் தரம் ஆகியவை குறைந்​து​விட்​டன.

விவ​சா​யிகள், வேளாண் விஞ்​ஞானிகள் உள்​ளிட்ட அனைத்து தரப்​பினரும் ஒன்​றிணைந்து ‘மோடி மிஷன்’ என்ற பெயரில் நாடு முழு​வதும் பருத்தி சாகுபடியை அதி​கரிக்க தீவிர நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக ‘டீம் காட்​டன்’ என்ற அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டுக்​குத் தேவை​யான அளவுக்கு பருத்தி உற்​பத்தி செய்​வது அவசி​யம். உள்​நாட்​டுத் தேவைக்​கு​போக மீத​முள்​ளவற்றை ஏற்​றுமதி செய்ய வேண்​டும். தேவையைக் கருத்​தில் கொண்​டு, அதற்​கான ஆராய்ச்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்.

தென்​னிந்​தி​யா​வில் இயந்​திரப் பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. புழு (போல் வேர்ம்) தாக்​குதலை எதிர்​கொள்ள ‘ஏஐ’ தொழில்​நுட்​பம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். கோவை நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​ளு​மாறு தமிழக விவ​சா​யத் துறை அமைச்​சருக்கு முறைப்​படி அழைப்பு விடுக்​கப்​பட்​டது. எனினும், அவர் வரவில்​லை. நாங்​கள் மத்​திய, மாநிலம் என்று பாகு​பாடு பார்ப்​ப​தில்​லை.

பருத்​திக்கு விதிக்​கப்​படும் 11 சதவீத இறக்​குமதி வரியை நீக்க வேண்​டும் என்ற தொழில் துறை​யினரின் கோரிக்​கையை பரிசீலித்து வரு​கிறோம். கலப்பட உரம், போலி விதை பிரச்​சினை அதி​கம் உள்​ளது. அபராதம் விதிக்​கும் வகை​யில் மட்​டுமே தற்​போது சட்​டம் உள்​ளது. எனவே, இவற்றை முற்​றி​லும் தடுக்க தண்​டனை​களை கடுமை​யாக்​கி, சட்​டம் இயற்ற நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். இவ்​​வாறு மத்​திய அமைச்​சர்​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT