உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நலம் மற்றும் குடும்ப நல விளக்க கையேட்டை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். 
தமிழகம்

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: உலக மக்​கள்​தொகை தினத்​தையொட்​டி, சுகா​தா​ரத் துறை சார்​பில் பேரணி, விழிப்​புணர்வு போட்​டி, கருத்​தரங்​கம் நடை​பெற்​றன.

39-வது உலக மக்​கள்​தொகை தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, செம்​மொழி பூங்​கா​வில் விழிப்​புணர்வு பேரணியை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார். தேனாம்​பேட்டை டிஎம்​எஸ் வளாகத்​தில் பேரணி நிறைவடைந்​தது. பின்​னர், அமைச்​சர் தலை​மை​யில்அதி​காரி​கள், ஊழியர்​கள் விழிப்​புணர்வு உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து கருத்​தரங்​கம் நடந்தது. இளம் பரு​வத்​தினருக்​கான விழிப்​புணர்வு நல கையேடு, குடும்​பநல விளக்க கையேடு​களை வெளி​யிட்ட அமைச்​சர், விழிப்​புணர்வு போட்​டி​யில் வெற்றி பெற்ற செவிலிய மாணவி​களுக்கு பாராட்டு சான்​றிதழ், கேட​யங்​களை வழங்​கி​னார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:‘ஆரோக்​கிய​மான போதிய இடைவெளி​யுடன் பிள்​ளைப் பேறு, திட்​ட​மிட்ட பெற்​றோருக்​கான அடை​யாளம்’ என்​பதே இந்த ஆண்​டின் மக்​கள்​தொகை தின கருப் பொருள். தமிழக சுகா​தா​ரத் துறை எடுத்த பல்​வேறு நடவடிக்​கைகளால், பேறு காலத்​தில் தாய்​மார்​கள் உயி​ரிழப்பு விகிதம் 39.4 சதவீதம் அளவுக்குகுறைந்​துள்​ளது. சிசு உயிரிழப்பு விகிதம் 1,000-க்கு 7.7 என்ற அளவில் குறைந்​துள்ளது.

கிருஷ்ணகிரி, தரு​மபுரி உள்​ளிட்ட மாவட்​டங்​களில் குழந்தைதிரு​மணம் பெரிதும் கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அதற்கான விழிப்​புணர்​வுக்​காக இளம் பரு​வத்​தினருக்​கான கையேடு, குடும்ப நலத்திட்ட கையேடு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார், தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்​பு​ராஜ், தமிழ்​நாடு சுகா​தார அமைப்பு திட்ட இயக்​குநர் வினீத், குடும்ப நலஇயக்​குநர் சித்​ரா, மருத்​து​வக்கல்வி, ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், பொது சுகா​தா​ரம், நோய் தடுப்பு மருந்துதுறை கூடு​தல் இயக்குநர் சோமசுந்​தரம், துணை இயக்குநர்சங்​கரேஸ்​வரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT