தமிழகம்

மீண்டும் சட்டத்தை மீறும் காவல்துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மலா பால் நிறுவனத்​தின் கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்த நவீன் என்​பவர், அந்த நிறு​வனத்​தில் பணம் கையாடல் செய்​த​தாகக் குற்றச்சாட்டு எழுந்​ததை அடுத்​து, சென்னை கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜன் விசா​ரித்து வந்த நிலை​யில், சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ளார்.

திருப்​புவனம் இளைஞர் அஜித்​கு​மார், காவல்​துறை​யின​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட துயர சம்​பவத்​தின் வடுமறை​யும் முன்​பே, மீண்டும் காவல்​துறை சட்​டத்தை மீறிசெயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது என்​றால், உண்​மை​யில் காவல்​துறை, முதல்வர் ஸ்டா​லின் கட்​டுப்​பாட்​டில் இல்லை என்​பதே உண்​மை. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நயினார் நாகேந்திரன் அறிக்கை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலாபால் நிறுவனத்தில் பணம்கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் அதிர்ச்சி செய்திகள், நம்பும் படியாக இல்லை. அவரது மரணம் குறித்த முறையான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT