அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்கள் 171 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.71 கோடியை குடும்ப நல நிதியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று வழங்கினார். படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி வழங்குவதா? - பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ​வி​தி​களைமீறி திமுக ஐடி விங்கை சேர்ந்​தவர்​களை ஏபிஆர்ஓ பணி​யிடங்​களில் நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வரு​வ​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் உதவி மக்​கள் தொடர்பு அலு​வலர் (ஏபிஆர்ஓ) பணி​யிடங்​களில் நியமனம் செய்ய சென்னை உயர்​நீ​தி​மன்​றம் தெளி​வான வழி​காட்​டு​தல்​களு​டன் கூடிய தீர்ப்​பு​களை வழங்கி இருக்​கிறது. அத்​தீர்ப்​பு​களை மீறி ஸ்டா​லின் அரசு, திமுக ஐடி விங் பணி​யாளர்​களை தகு​தி​யின்றி நியமிக்க முயல்​வ​தாக செய்​தி​கள் வரு​கின்​றன. இதற்கு எனது கண்​டனத்​தைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தலை​மையி​லான முதல் பெஞ்ச் 2016-ம் ஆண்டு வழங்​கிய தீர்ப்​பில், ஏபிஆர்ஓ ஆள்​சேர்ப்​புக்​கான விதி​களை தளர்த்​து​வது, தகு​தி​யானவர்​களை புறக்​கணிப்​பது நியாயமற்​றது என்று கண்​டித்​து, விதி​களைத் தளர்த்​து​வது, விதி​விலக்​காக மட்​டும் இருக்க வேண்​டுமே தவிர, வழக்​க​மான நடை​முறை​யாக இருக்​கக் கூடாது என்று தெளி​வாகத் தெரி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில், ஏபிஆர்ஓ பணிக்கு இளங்​கலை பட்​டப்​படிப்​புடன், பத்​திரிகை மற்​றும் மக்​கள் தொடர்பு அல்​லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்​டாய​மாக்​கப்​பட்ட அரசாணையை திரும்​பப் பெற திமுக அரசு முடி​வெடுத்​திருப்​ப​தாகத் தெரிய​வரு​கிறது. இது, தகு​தி​யற்​றவர்​களை​யும், ஆட்​சி​யாளர்​களுக்கு வேண்​டிய​வர்​களை​யும் ஏபிஆர்ஓ பணிக்கு நியமிக்​கும் திமுக அரசின் மோச​மான முயற்​சி​யாகவே கருதப்​படு​கிறது.

திமுக அரசு, ஏபிஆர்ஓ பணி​யின் அடிப்​படைத் தகு​தி​களை புறக்​கணித்​து, திமுக ஐடி விங்கை சேர்ந்​தவர்​களை, பத்​திரி​கைத் துறை​யில் எந்த அனுபவமோ கல்​வித் தகு​தியோ இல்​லாமல், தற்​காலிக நியமனம் என்ற பெயரில் வயது, சாதி, மகளிர், ஊனமுற்​றோர் ஒதுக்​கீடு விதி​களுக்​கு, விதி​விலக்கு அளித்து நியமிக்க முயல்​வ​தாகத் தெரிய​வரு​கிறது. மேலும், தேர்​தல் ஆதா​யத்​துக்கு இவர்​களைப் பயன்​படுத்​து​வதற்​கான உள்​நோக்​க​மாகவே தோன்​று
கிறது.

பத்​திரிகை மற்​றும் மக்​கள் தொடர்​புத் துறை​யில் கல்வி கற்​று, வேலை​வாய்ப்​புக்​காக காத்​திருக்​கும் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​களின் கனவு​களைத் தகர்க்​கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பறிப்​ப​தாக உள்​ளது. இதற்கு மாணவர்​கள் மற்​றும் பத்​திரி​கைத் துறை​யினர் மத்​தி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வு​களை மதித்​து, தற்​காலிக நியமனம் என்ற பெயரில் தகு​தி​யற்​றவர்​களை நியமிக்​கும் முயற்​சியை உடனடி​யாக கைவிட வேண்​டும். கடந்த 2022-ம் ஆண்டு இந்த அரசு வெளி​யிட்ட அரசாணை​யின்​படி ஏபிஆர்ஓ பணிக்கு பத்​திரிகை மற்​றும் மக்​கள் தொடர்பு அல்​லது மீடியா சயின்ஸ் துறை​யில் குறைந்​த​பட்​சம் டிப்​ளமோ அல்​லது பட்​டப்படிப்பு முடித்​தவர்​களை, டிஎன்​பிஎஸ்சி மூலம் மட்​டுமே நியமிக்க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT