தமிழகம்

கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்: டிடிவி.தினகரன் கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமித்ஷா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியம்தான்.

கொள்கை வேறாக இருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். இந்தக் கூட்டணி வலுப்பெறுவதை பார்த்து திமுக கூட்டணியினர் அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக பதில் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT