தமிழகம்

தைலாபுரம் வராத நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: ‘தைலாபுரத்​தில் நடை​பெறுகிற கூட்​டங்​களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். பாமக மாவட்​டச் செய​லா​ளர்​கள், தலை​வர்​கள் மற்​றும் மாநில நிர்​வாகி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் தைலாபுரத்தில் நேற்று நடை​பெற்​றது.

நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளிசங்​கர், அரசி​யல் ஆலோசனைக் குழு தலை​வர் தீரன், மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், பொருளாளர் சையத் மன்​சூர் உசேன், சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ அருள் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராம​தாஸ் கூறிய​தாவது: பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத்தை 46 ஆண்​டு​களாக வழிநடத்தி வரு​கிறேன். வன்​னியர் சங்​கத்​துக்கு தலை​வ​ராக பு.​தா. அருள்​ மொழி​யும், கட்​சிக்கு நிறு​வனர் மற்​றும் தலை​வ​ராக நானும் உள்ளோம். 34 துணை அமைப்​பு​களை உரு​வாக்​கி, வழி​காட்டி வரு​கிறேன். 34 அமைப்​பு​களும் திறம்​படச் செயல்​படு​வதற்​காக நிர்​வாகி​களை ஊக்​கு​வித்​து வரு​கிறேன்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாமக பெரிய வெற்​றியைப் பெறும். தைலாபுரத்​தில் நடை​பெறும் கூட்​டத்​துக்கு வந்​துள்ள மாவட்​டச் செய​லா​ளர்​கள், தலை​வர்​கள், மாநிலப் பொறுப்​பாளர்​கள்​தான் தேர்​தலில் போட்​டி​யிடப் போகிறார்​கள். இவர்​களைத்​தான் நான் வேட்​பாள​ராகத் தேர்ந்​தெடுப்​பேன். இவர்​கள்​தான் எதிர்​கால சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள். கட்​சி​யில் அனைத்து அதி​கார​மும் எனக்கு உள்​ளது. அதனால்​தான், கட்​சி​யின் தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளேன்.

கூட்​டணி குறித்து தற்​போதைக்கு எது​வும் சொல்​லத் தேவை​யில்​லை. கூட்​டணி குறித்து பேசி​னால், கூட்​டணி முடி​வாகி விட்​டதா என்று கேட்​பார்​கள். இன்​னும் கூட்​டணி முடி​வாக​வில்​லை. நல்ல, வித்​தி​யா​சமான, வெற்றி பெறும் கூட்​டணி அமை​யும். தற்​போதுள்ள 5 பாமக எம்​எல்​ஏ-க்​களுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​படுமா என்ற ரகசி​யத்தை தற்போது சொல்​லக்கூடாது.

மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் பெரி​யார், அண்ணா ஆகியோர் அவம​திக்​கப்​பட்​டது குறித்து கேட்​கிறீர்​கள். யாரை​யும் இழி​வுபடுத்​தக் கூடாது. இவ்​வாறு ராம​தாஸ் கூறி​னார். தொடர்ந்​து, கட்​சி​யின் இணைச் செய​லா​ள​ராக அருள் எம்​எல்ஏ நியமிக்​கப்​பட்​டுள்​ள​தாக ராம​தாஸ் அறி​வித்​தார்.

அருள் எம்எல்ஏவை நீக்கிய அன்புமணி: இதற்கிடையே, பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அருள் எம்எல்ஏவை அக்கட்சியின் தலைவர் அன்புமணி நீக்கியுள்ளார். மேலும், அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமித்துள்ளார்.

இவருக்கு சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள கட்சியின் அனைத்துநிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புமணிகேட்டுக் கொண்டுள்ளார். ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் இரா.அருள், அண்மையில் அன்புமணி நடத்திய சேலம், தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT