முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம் 
தமிழகம்

‘மா’ விவசாயிகளுக்கு இழப்பீடு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மார்கோ

சென்னை: “மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ‘மா’ விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்.

மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும்.

மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT