தமிழகம்

டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பான விவ​காரத்​தில் தொடர்பு இருப்​ப​தாக கூறி திரைப்பட தயாரிப்​பாள​ரான ஆகாஷ் பாஸ்​கரன், தொழில​திபர் விக்​ரம் ரவீந்​திரன் ஆகியோரது வீடு​கள், அலு​வல​கங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்டு வீடு, அலு​வல​கங்​களுக்கு சீல் வைத்​தனர்.

அமலாக்​கத்​துறை​யின் இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை ஏற்​கெனவே நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது வீடு மற்​றும் அலு​வல​கங்​களுக்கு சீல் வைக்​கும் அதி​காரம் அமலாக்​கத்​துறைக்கு உள்​ளதா என நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பிய நிலை​யில், அவ்​வாறு சீல் வைக்​கும் அதி​காரம் அமலாக்​கத்​துறைக்கு இல்லை என தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் நீதிப​தி​கள் நேற்று பிறப்​பித்​துள்ள இடைக்​கால உத்​தர​வில், ‘‘டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக மனு​தா​ரர்​களுக்கு எதி​ராக எந்த ஆதா​ரங்​களும் அமலாக்​கத்​துறை​யின​ரால் தாக்​கல் செய்​யப்​பட​வில்​லை, அப்​படி​யிருக்​கும்​போது ஆதா​ரமின்றி அவர்​களின் வீடு​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​த​வும், மின்​னணு சாதனங்​களை பறி​முதல் செய்​ய​வும் அமலாக்​கத்​துறைக்கு அதி​காரம் இல்​லை.

இந்த சோதனை​யின் அடிப்​படை​யில், மனு​தா​ரர்​களுக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை மேல் நடவடிக்கை எடுக்க இடைக்​கால தடை விதிக்​கிறோம். பறி​முதல் செய்​யப்​பட்ட மின்​னணு சாதனங்​களை அவர்​களிடம் திருப்பி ஒப்​படைக்க வேண்​டும்’’ என உத்​தர​விட்டு விசா​ரணையை 4 வார காலத்​துக்கு தள்ளி வைத்​துள்​ளனர்.

மேல்​முறை​யீடு செய்ய ஏது​வாக இடைக்​கால தீர்ப்பை நிறுத்தி வைக்க அமலாக்​கத்​துறை வழக்​கறிஞர் என்​.ரமேஷ் கோரிக்கை விடுத்​தார். ஆனால் அந்த கோரிக்​கை​யை ஏற்​க நீதிப​தி​கள்​ மறுத்​து விட்​டனர்​.

SCROLL FOR NEXT