தமிழகம்

திருக்காலிமேடு பிரதான சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கோ.கார்த்திக்

​காஞ்​சிபுரம் நகரத்​தின் நடுவே அமைந்​துள்ள மஞ்​சள் நீர் கால் வாய் நகரப்​பகுதி குடி​யிருப்​பு​களின் கழி​வுநீர் மற்​றும் மழைநீர் வடி​கால்​வா​யாக விளங்கி வரு​கிறது. ஒக்​கப்​பிறந்​தான் குளத்​திலிருந்து வெளி​யேறும் உபரிநீர், நகரத்​தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத்​தேவையை பூர்த்தி செய்​து, நத்​தப்​பேட்டை ஏரியை சென்​றடை​யும் வகை​யில் மன்​னர்​கள் காலத்​தில் கட்டமைக்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது. எனினும், ஒக்​கப்​பிறந்​தான் குளத்​தின் ஆக்​கிரமிப்​பு​கள் காரண​மாக நீர்​வரத்து இன்​றி​யும் நகரின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் சாயப்​பட்​டறை கழி​வுநீரும் இந்த கால்​வா​யில் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது.

நகரப்​பகு​தி​யில் உள்ள குடி​யிப்​பு​களின் கழி​வுநீர் மற்​றும் சாலைகளில் தேங்​கும் மழைநீர் வெளி​யேறி நத்​தப்​பேட்டை ஏரியை சென்​றடைகிறது. இதனால், ஏரி​யின் நீர் மாசடைந்​துள்​ளது. இதனால், மஞ்​சள் நீர் கால்​வா​யில் கழி​வுநீர் மற்​றும் பிளாஸ்​டிக் கழி​வு​கள் கலப்​பதை தடுத்​து, கால்​வாயை சீரமைக்க வேண்​டும் என உள்​ளூர் மக்​கள் கோரிக்கை விடுத்​தனர்.

இந்​நிலை​யில், மஞ்​சள்​நீர் கால்​வாயை சீரமைப்​ப​தற்​காக மாநக​ராட்சி நிர்​வாகம் ரூ.40 கோடி நிதி ஒதுக்​கியது. இதன்​மூலம், 6 கி.மீ. நீளம் கொண்ட மஞ்​சள்​நீர் கால்​வா​யின் இரு​புறங்​களி​லும் கான்​கிரீட் தடுப்பு சுவர் அமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. இதனால், திருக்​காலிமேடு செல்​லும் பிர​தான சாலை​யோரம் உள்ள கால்​வா​யின் கரையோரத்​தில் உள்ள குடி​யிருப்​பு​களில் இருந்து வெளி​யேறும் கழி​வுநீரை, கால்​வா​யில் விடு​வதற்​காக சாலையை உடைத்து அமைக்​கப்​பட்ட குழாய்​கள், கரை​யின் அருகே துண்​டிக்​கப்​பட்​டன. மேலும், அப்​பகு​தி​யில் கான்​கிரீட் சுவர்​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

ஆனால், துண்​டிக்​கப்​பட்ட கழி​வுநீர் குழாய்​களில் இருந்து தொடர்ந்து வெளி​யேறி வரு​கிறது. இவ்​வாறு வெளி​யேறும் கழி​வுநீர் சாலை​யில் ஆங்​காங்கே குட்​டை​போல் தேங்​கு​வ​தால் கடும் துர்​நாற்​றத்​துடன் சுகா​தா​ரசீர் கேடு ஏற்​பட்​டுள்​ளது. மழை​யின் போது, கழி​வுநீர் சாலை​யில் வழிந்​தோடு​வ​தால் நோய் தொற்று ஏற்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. மேலும், வாகன போக்​கு​வரத்து மிகுந்த இந்த சாலை​யில் கழி​வுநீர் தேங்கி நிற்​ப​தால் பள்​ளி, கல்​லூரி செல்​லும் மாணவர்​கள் சிரமத்​துடன் செல்​லும் நிலை உள்​ளது. அவ்​வப்​போது வாகன விபத்​துகளும் ஏற்​படு​கிறது.

அதனால், கழி​வுநீரை வெளி​யேற்​றும் குடி​யிருப்​பாளர்​கள் மற்​றும் வணிக நிறு​வனங்​களுக்கு அபராதம் விதித்​து, கழி​வுநீர் குழாய்​களை வீட்​டின் அருகே துண்​டிக்க வேண்​டும் மற்​றும் கால்​வா​யின் அருகே உள்ள சிறிய கழி​வுநீர் குட்​டைகளை மூட​வேண்​டும் என வாகன ஓட்​டிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்​து, காஞ்​சிபுரம் மாநக​ராட்சி அதி​காரி​கள் கூறிய​தாவது: மஞ்​சள்​நீர் கால்​வா​யில் கான்​கிரீட் தடுப்​புசுவர் அமைக்​கப்​பட்​டுள்​ள​தால், சட்​ட​விரோத கழி​வுநீர் குழாய்​கள் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், குடி​யிருப்​பாளர்​கள் மாற்று ஏற்​பாடு​கள் செய்​யாமல் தொடர்ந்து அந்த குழாய்​களின் வழியே கழி​வுநீரை வெளி​யேற்றி வரு​வ​தாக தெரி​கிறது. சாலை​யில் கழி​வுநீர் தேங்​கு​வதை தடுக்​க​வும், கழி​வுநீர் வெளி​யேற்​றத்​தை நிறுத்​த​வும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என்​றனர்​.

SCROLL FOR NEXT