தமிழகம்

டாஸ்மாக் கடைகளுக்கு ஆட்சேபம் இருந்தால் 30 நாளில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தடை செய்​யப்​பட்ட பகு​திக்​குள் அல்​லது மக்​கள் எதிர்ப்​புமிக்க இடங்​களில் டாஸ்​மாக் கடைகள் அமைக்​கப்​படும் பட்சத்தில், அவை மாவட்ட ஆட்​சி​யரின் தலை​யீட்​டின் பேரில் அகற்​றப்​படு​கின்​றன.

இதுதொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் வெளி​யிட்ட அறிவிக்​கை: ஏற்​கெனவே டாஸ்​மாக் மது​பானக்​கடைகள் அமை​விடங்​களுக்கு அரு​கில் புதி​தாக வழி​பாட்​டுத் தலங்​கள், கல்வி நிறு​வனங்​கள் வந்​தால் ஏற்​கெனவே உள்ள விதி​கள் இங்கு பொருந்​தாது.

ஆனால், டாஸ்​மாக் கடைகள் தொடர்​பான புகார்​கள் தெரிவிக்​கப்​படும் பட்​சத்​தில் மாவட்ட ஆட்​சி​யர்​கள், விதி​களின்​படி அதை பரிசீலித்​து, தகு​தி​கள் மற்​றும் உத்​தர​வு​கள் அடிப்​படை​யில் 30 நாட்​களுக்​குள் ஆணை பிறப்​பிக்க வேண்​டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT