மேலக்கோடையூரில் காவல் குடியிருப்பு அருகே பராமரிப்பின்றி இருக்கும் சிறுவர் பூங்கா. | படங்கள்: எம்.முத்துகணேஷ் | 
தமிழகம்

பராமரிப்பற்ற பூங்காவை புதுப்பிக்க வேண்டும்: மேலக்கோட்டையூர் மக்கள் வேண்டுகோள்

பெ.ஜேம்ஸ்குமார்

மேலக்​கோட்​டையூர் ஊராட்​சிக்கு உட்​பட்ட காவலர் குடி​யிருப்பு அருகே உள்ள பூங்​காவை பராமரித்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்போரூர் ஒன்​றி​யம் மேலக்​கோட்​டையூர் ஊராட்சி காவலர் குடி​யிருப்பு அருகே சிறு​வர் பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ளது. தொடக்​கத்​தில் பயன்​பாட்​டில் இருந்து வந்த இந்த சிறு​வர் பூங்​கா​வில், நாளடை​வில் முறை​யான பராமரிப்பு இல்​லாமல் போனது. போதிய பாது​காப்பு வசதி இல்​லாத காரணத்​தால், பயன்​படுத்​துபவர்​களின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளது.

தற்​போது பூங்​கா​வில் முட்​புதர்​கள் வளர்ந்து காடு​போல் உள்​ளது. பெரும்​பாலான விளை​யாட்டு உபகரணங்​கள் சேதமடைந்​துள்​ளன. பராமரிப்​பின்றி இருப்​ப​தால் அப்​பகுதி மக்​கள் அவதிப்பட்டு வரு​கின்​றனர். வயதானோர் நடைப​யிற்சி செய்​யும் பாதை முழு​வதும் புதர் மண்டி கிடக்​கிறது. பூங்​காவை முறை​யாக பராமரிக்​காத​தால் சிறு​வர்​கள் விளை​யாடக்​கூடிய அனைத்து உபகரணங்​களும் துருப்பிடித்​து, உடைந்​து, பாழடைந்து பயன்​படுத்த முடி​யாத நிலை​யில் உள்ளன.

இதனால் பூங்கா​வுக்கு வந்து சிறு​வர்​கள் விளை​யாட முடி​யாத சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. மேலும் செடிகள் முளைத்து புதர்​போல் உள்​ள​தால், நடை​பாதையை பயன்​படுத்த முடி​யாத சூழ்​நிலை உள்​ளது. எனவே பயன்​பாடற்ற நிலை​யில் காணப்​படும் பூங்​கா​வில் சிறு​வர்​கள் விளை​யாடக்​கூடிய அனைத்து உபகரணங்​களை​யும் புதுப்​பித்​து, பூங்​காவை சீரமைத்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து அப்​பகு​தியை சேர்ந்த குமாரி என்​பவர் கூறியதாவது: விடு​முறை​யில் சிறு​வர்​கள் நகரில் உள்ள பூங்​காக்​களுக்​குச் சென்று விளை​யாடு​வது வழக்​கம். காவலர் குடி​யிருப்பு அரு​கில் சிறு​வர் பூங்கா சிதிலமடைந்து விளை​யாட்டு உபகரணங்​கள் சேதமடைந்​துள்​ளன. பூங்கா பயன்​பாடின்றி உள்​ள​தால் கோடை விடு​முறையை கழிக்க சிறு​வர்​கள் சிரமப்​பட்டு வரு​கின்​றனர். ஒரு காலத்​தில் விடு​முறை நாட்​களில் சிறு​வர்​கள் என அனை​வரும் இங்கு சென்று விளை​யாடி மகிழ்ந்து பொழுதை கழித்​தனர். இன்று நிலைமை வேறு​மா​திரி​யாக உள்​ளது.

இந்த பூங்​காவை முறை​யாக பராமரிக்​காத​தால், செடிகள் வளர்ந்து புத​ராக காணப்​படு​கிறது. இதனால், குழந்​தைகள் அச்​சத்​துடன் விளை​யாடி வரு​கின்​றனர். மேலும், மாலை நேரத்​தில் போதிய விளக்கு வெளிச்​சம் இல்​லாமல் இருளில் மூழ்கி உள்​ளது. பூங்​காவை சீரமைக்க ஊராட்சி நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஊராட்​சிக்கு போதிய வரு​வாய் இருந்​தும் பூங்​காக்​களை பராமரிப்​பது இல்​லை. ஊராட்​சி​யில் ஏராள​மான தொழிற்​சாலைகளும் உள்​ளது. சமூக பொறுப்பு நிதி​யின் கீழ் பூங்​காவை சீரமைக்​க ஊராட்​சி நிர்​வாகம்​ நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என்​றார்​.

SCROLL FOR NEXT