தமிழகம்

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசுசையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய பின், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது பரவி வரும் கரோனா, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

முகக்கவசம் அணிய வேண்டும்: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளனர். இருந்த போதும், தமிழக அரசு கூறியபடி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைப் பின்பற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT