சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஹேமந்த் சந்தன் கவுடர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
தமிழகம்

உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு

செய்திப்பிரிவு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் சந்தன் கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் வந்த அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. அதேநேரம் காலியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் 1969-ம் ஆண்டு செப்.28 அன்று பிறந்தார். 1994-ல் கர்நாடக மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2019-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். தற்போது அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி வந்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT