தமிழகம்

கோடை விடுமுறை நிறைவு: அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து வரும் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

எனவே, சொந்த ஊர் சென்றவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஊர்களுக்கு திரும்புவார்கள். இதற்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ஏராளமான இருக்கைகள் உள்ளதால், அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து பயணித்தால், பேருந்து எண்ணிக்கையை கணக்கிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், அனைத்து முக்கிய நிலையங்களிலும் சிறப்பு பேருந்து சேவையைக் கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT