தமிழகம்

சென்னை | பிரதான குழாய் இணைப்பு பணி காரணமாக 14 இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், வில்விவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

8 மணி முதல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் நாளை (மே 24) காலை 8 மணி முதல் 25-ம் தேதி காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதன்படி, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, சவுக்கார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள, வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT