கல்லூரி மாணவிக்கு ஆதரவாகவும், திமுக அரசைக் கண்டித்தும் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். (உள்படம்) கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி. 
தமிழகம்

கணவர் மீது புகார் தெரிவித்த கல்லூரி மாணவிக்கு ஆதரவாக திமுக அரசை கண்டித்து அரக்கோணத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

அரக்கோணம்: கல்​லூரி மாணவிக்கு ஆதர​வாக​வும், திமுக அரசைக் கண்​டித்​தும் அரக்​கோணத்​தில் அதி​முக​வினர் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்டனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்​தவர் தெய்வா (எ) தெய்​வச்​செயல்​(40). அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர். அரக்​கோணம் அடுத்த பரித்​திபுத்​தூரைச் சேர்ந்​தவர் ப்ரீத்​தி(21). கல்​லூரி மாண​வி.ஏற்​கெனவே திரு​மண​மான இவர், கருத்து வேறு​பாடு காரண​மாக கணவரைப் பிரிந்து வாழ்​கிறார்.

இந்​நிலை​யில், ப்ரீத்​தியை சில மாதங்​களுக்கு முன்பு தெய்வா சந்​தித்​து, அவரைக் காதலிப்​ப​தாக​வும், திரு​மணம் செய்ய விரும்​புவ​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, கடந்த ஜன. 30-ம் தேதி அவர்​களுக்கு திரு​மணம் நடை​பெற்​றது. இரு​வரும் அரக்​கோணத்​தில் வசித்து வந்​தனர்.

சில நாட்​களுக்கு முன்​பாக அரக்​கோணம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ப்ரீத்​தி, கணவர் தெய்வா மீது புகார் அளித்​தார். அதில், தெய்வா ஏற்​கெனவே திரு​மண​மானவர் என்​றும், பல பெண்​களு​டன் அவருக்​குத் தொடர்பு உள்​ள​தாக​வும், தன்னை அடித்து துன்​புறுத்​தி, சில திமுக நிர்​வாகி​களின் விருப்​பத்​துக்கு இணங்​கு​மாறு வற்​புறுத்​து​வ​தாக புகாரில் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து போலீஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், தனது புகார் மீது போலீ​ஸார் முறை​யாக விசா​ரணை நடத்​த​வில்லை என்ற ப்ரீத்​தி​யின் குற்​றச்​சாட்டு சமூகவலை​தளங்​களில் வைரலானது. இந்​நிலை​யில், தெய்​வாவை கட்​சிப் பொறுப்​பில் இருந்து நீக்​கு​வ​தாக திமுக இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி உத்​தர​விட்​டுள்​ளார். இந்நிலை​யில், ப்ரீ​த்திக்கு ஆதர​வாக​வும், திமுக அரசைக் கண்​டித்​தும் அரக்​கோணம் பழைய பேருந்து நிலை​யம் அருகே நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்த அனு​மதி கோரி அதி​முக​வினர் போலீ​ஸில் மனு அளித்​தனர்.

ஆனால், போலீ​ஸார் ஆர்ப்​பாட்​டத்​துக்கு அனு​மதி அளிக்​க​வில்லை. எனினும், தடையை மீறி அரக்​கோணம் எம்​எல்ஏ சு.ரவி தலை​மை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. முன்​னாள் அமைச்​சர் வளர்​மதி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்​தார். தொடர்ந்​து, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வலி​யுறுத்​தி, கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் அதி​முக​வினர் மனு அளித்​தனர்.

தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன்: இதற்​கிடை​யில், தெய்​வச்​செயல் மற்​றும் அவரது மனைவி ஆகியோர் முன்​ஜாமீன் வழங்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். அதில், “அதி​முக​வினரின் தூண்​டு​தல் காரண​மாகவே சம்​பந்​தப்​பட்ட மாணவி தவறான குற்​றச்​சாட்டை கூறியுள்​ளார். எனவே, எங்​களுக்கு முன்​ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று கோரி​யிருந்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் இருவருக்​கும் நிபந்​தனை அடிப்​படை​யில் முன்​ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளார்​.

டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு - சென்னை: அரக்​கோணம் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணை​யம் தாமாக முன்வந்து விசா​ரணைக்கு எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக ஆணை​யத்​தின் அதி​காரப்​பூர்வ வலை​தளப் ​பக்கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக இளைஞரணி நிர்​வாகி மீதான குற்​றச்​சாட்​டு​களின் தீவிரத்​தன்மை மற்​றும் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வரின் அரசி​யல் தொடர்​பு​களைக் கருத்​தில் கொண்​டு, தேசிய மகளிர் ஆணை​யத் தலை​வர், உடனடி​யாக பாரபட்​சமற்ற மற்​றும் வெளிப்​படை​யான விசா​ரணையை வலி​யுறுத்தி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

பாதிக்​கப்​பட்​ட​வரின் பாது​காப்பை உறுதி செய்​தல், சுதந்​திர​மான விசா​ரணைக் குழுவை அமைத்​தல், எந்த அரசி​யல் தலை​யீட்​டை​யும் தடுத்து பிஎன்​எஸ் சட்ட விதி​களின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டியதன் அவசி​யத்தை கடிதத்​தில் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும், மூன்று நாட்​களுக்​குள் முதல் தகவல் அறிக்கை நகலுடன், விரி​வான மேல்​நட​வடிக்கை குறித்த விவரத்​தை​யும் அனுப்​பு​மாறு டிஜிபியை ஆணை​யம் கேட்​டுக் கொண்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT