கோப்புப்படம் 
தமிழகம்

5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும், என போக்குவரத்து போலீஸாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகத்தில் சாலைகளில் செல்லுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய போலீஸாருக்கு உதவும் வகையில், சென்னையின் முக்கியச் சாலைகள், சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு அபராதம் விதிக்கும் பணிகளிலும் போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சோதனை என்ற பெயரில், போக்குவரத்து போலீஸார் கூட்டமாக சாலையில் நின்று வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து சென்னையில் போக்குவரத்து போலீஸார், என்னென்ன குற்றங்களுக்காக அபராதம் விதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,

SCROLL FOR NEXT