தமிழகம்

இளம்பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்தது: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: பொள்​ளாச்சி வழக்​கின் தீர்ப்பை முதல்​வர், தலை​வர்​கள் வரவேற்​றுள்​ளனர். பெண்​களுக்கு இழைக்​கப்​பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்​திருக்​கிறது என அவர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.பொள்​ளாச்​சி​யில் இளம்​பெண்​கள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 9 பேருக்கு சாகும்​ வரை சிறைத் தண்​டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. இதற்கு முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வரவேற்றுள்​ளனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: பொல்​லாத அதி​முக நிர்​வாகி உள்​ளிட்ட குற்​ற​வாளி​களால் நிகழ்த்​தப்​பட்ட பெருங்​கொடுமைக்கு நீதி
கிடைத்​திருக்​கிறது. அதி​முக குற்​ற​வாளி அடங்​கிய கூடாரத்​தைப் பாது​காக்க முயற்​சித்த ‘சார்’கள் மானமிருந்​தால் வெட்​கித் தலைகுனியட்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: பெண்​கள் பாது​காப்பை உருக்​குலைக்​கும் குற்​றா​வாளி​கள் நீதி​யின் பிடி​யில் இருந்து என்​றும் தப்​பிக்க முடி​யாது. தமிழகத்​தில் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​களும், போக்சோ வழக்​கு​களும் தொடர்ந்து அதி​கரித்து வரும் நிலை​யில் குற்​றமிழைக்க முற்​படும் கயவர்​களுக்கு ஓர் எச்​சரிக்கை மணி​யாக இத்​தீர்ப்பு இருக்​கும்.

முன்​னாள் ஆளுநர் தமிழிசை: மலர் போன்று இருந்த பெண்​கள் கசக்கி வீசப்​பட்ட பொள்​ளாச்சி வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை அளிக்​கப்​பட்ட தீர்ப்பு பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​களை தீர்த்து வைக்​கட்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன்: பாலின சமத்​து​வத்தை நோக்​கிய பயணத்​தில் கோவை மகளிர் நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு போராடும் பெண்​களுக்கு வாளும், கேடய​மு​மாக இருக்​கும். இந்த வரலாற்​றுச் சிறப்​பு மிக்க தீர்ப்பை வரவேற்​கிறோம்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: பாதிக்​கப்​பட்ட பெண்​களின் நீதிக்​கான உறு​தியை வெளிப்​படுத்தி குற்​ற​வாளி​களுக்கு தண்​டனையை உறு​தி​செய்​வது பெண்​களுக்கு பெரும் நம்​பிக்​கையை தரு​வ​தாகும். வன்​முறைக்கு இலக்​காகும் பெண்​களை மவுனித்​துப் போகச் செய்​யும் போக்கை இப்​பெண்​கள் முறியடித்துள்ளனர்.

பாமக தலை​வர் அன்​புமணி: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​களில் ஈடு​படு​வோருக்கு மிகக்​கடுமை​யான எச்​சரிக்கை விடுக்​கும் வகை​யில் இந்​தத் தீர்ப்பு வழங்​கப்​பட்​டிருக்​கிறது. என்​றாலும் இது தாம​திக்​கப்​பட்ட நீதி​தான். இதற்​குக் காரணம் போதிய எண்​ணிக்​கை​யில் மகளிர் சிறப்பு நீதி​மன்​றங்​கள் இல்​லாதது. எனவே ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ஒரு மகளிர் சிறப்பு நீதி​மன்​றத்தை அமைக்க வேண்​டும்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: கடந்த 6 ஆண்​டு​களுக்​கும் மேல் துணிச்​சலாகப் போராடி, குற்​ற​வாளி​களுக்கு தகுந்த தண்​டனை பெற்​றுத்​தந்த பாதிக்​கப்​பட்ட சகோ​தரி​கள் அனை​வருக்​கும், இந்​தத் தீர்ப்பு ஓரள​வாவது மன ஆறு​தல் அளிப்​ப​தாக அமை​யும் என்று நம்​பு​கிறேன். இந்த வழக்​கில் நியா​யம் கிடைக்​கப் பாடு​பட்ட அனை​வருக்​கும் நன்​றி.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: இந்த தீர்ப்பு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்து. கூட்டுப் பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர்பிரேமல​தா: பொள்​ளாச்சி பாலியல் வழக்​கில் உலகமே பாராட்​டக்​கூடிய தீர்ப்பை கோவை மகளிர் நீதி​மன்​றம் அறி​வித்து இருப்​பதை வரவேற்​கிறோம். இந்த வழக்கை ஒரு உதா​ரண​மாக எடுத்​துக் கொண்டு இனி வருங்​காலங்​களில் இளைஞர்​கள் இது​ போன்ற தவறுகளை செய்​யாமல் கண்​ணி​யத்தோடு இருக்க வேண்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: பொள்​ளாச்​சி​யில் நடந்த பாலியல் வன்​கொடுமை செயல் மிரு​கத்​தன​மானது. இது​போன்ற சம்​பவங்​கள் இனி நடக்​கக்​கூ​டாது. தவறான கண்​ணோட்​டத்​துடன் பெண்​களை பார்ப்​பவர்​களுக்​கும், சிந்​திப்​பவர்​களுக்​கும் இத்​தீர்ப்பு பாட​மாக அமை​யும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: இந்த தீர்ப்பு பெண்​களிடம் ஈவு இரக்​கமின்றி அவர்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடுபட முயற்​சிக்​கும் ஒவ்​வொரு​வருக்​கும் வழங்​கப்​பட்​டிருக்​கும் எச்​சரிக்கை மணி.

தவெக தலை​வர் விஜய்: வரவேற்​கத்​தக்க தீர்ப்​பு. ஆனால் தாம​திக்​கப்​பட்ட நீதி, மறுக்​கப்​பட்ட நீதிக்​குச் சமம். எனவே பெண்​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கு​களை விசா​ரிக்க தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதி​மன்​றங்​கள் அமைத்​து, 90 நாட்​களுக்​குள் வி​சா​ரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இவர்​களு​டன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT