கோப்புப்படம் 
தமிழகம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதம் 87.59 லட்சம் பேர் பயணம்

ப.முரளிதரன்

சென்னை: ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக கடந்த ஏப்.30-ம் தேதியன்று 3.49 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச் சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்-அப், பேடிஎம் செயலி, போன்பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

SCROLL FOR NEXT